விடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும் அவளைச் சுற்றியுள்ள சமூக வேலிகளும்
எமது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எழுச்சி பெற்றிருக்கும் பெண்கள். பெண் விடுதலை , சமூகவிடுதலை, தேச விடுதலை என்ற நிலைப்பாட்டில் முழுவிடுதலை கோரி நிற்கின்றனர். போரிடுகின்றனர். இந்த நிலைப்பாடும் செயற்பாடும் நமது பெண் வாழ்விலும் சமூக அமைப்பிலும் ஒரு பெரும் உடைப்பே, புதிய பாய்ச்சலே கவனிக்கவேண்டிய திருப்பமே. அத்துடன் பெண் வாழ்விலும் நமது சமூக இயங்கு நிலையிலும் வித்தியாசமான அனுபவமாகவே இது அமைந்திருக்கிறது.
பெண் சமத்துவம் குறித்த கருத்தாடல்கள் செயற்பாடுகள் இன்று தீவிரமான நிகழ்நிலையிலிருக்கின்றன. அல்லது சமூக நிகழ்ச்சித் திட்டத்திலிருக்கின்றன. பெண் எனும் அடையாளத்தை வைத்து சமூகம் பெண்கள் மீது விதிக்கும் நிபந்தனைகளை வெற்றி கொள்ளவும் கூறிய சிந்தனை விழிப்பும் செயற்பாடும் பெண்களிடையே வேண்டப்படுகிறது. இது பெண்களிடம் மட்டுமின்றி முழு சமூகத்திடமும் வேண்டப்படுகின்றது என்பதே பொருத தமானது. ஏனெனில் ஒடுக்கப்படுவோருடைய விடுதலை என்பது ஒடுக்குவோரினது விடுதலையுமாகும் என்ற உண்மையின் அடிப்படையிலானதாக இது அமைகிறது.
இன்று நமது பெண் நிலைப்பாடு எவ வாறிருக்கிறது. பெண் வாழ்வு எவ வாறிருக்கிறது என்று பார்ப்பது முதலில் முக்கியமாகிறது.
எமது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எழுச்சி பெற்றிருக்கும் பெண்கள். பெண் விடுதலை , சமூகவிடுதலை, தேச விடுதலை என்ற நிலைப்பாட்டில் முழுவிடுதலை கோரி நிற்கின்றனர். போரிடுகின்றனர். இந்த நிலைப்பாடும் செயற்பாடும் நமது பெண் வாழ்விலும் சமூக அமைப்பிலும் ஒரு பெரும் உடைப்பே, புதிய பாய்ச்சலே கவனிக்கவேண்டிய திருப்பமே. அத்துடன் பெண் வாழ்விலும் நமது சமூக இயங்கு நிலையிலும் வித்தியாசமான அனுபவமாகவே இது அமைந்திருக்கிறது.
இந்த நிலைபாட்டிலும் செயற்பாட்டிலும் இயங்கும் பெண்கள் பெண் சமத்துவம். பெண்விடுதலை, பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளிலும் சமூகப் பிரக்ஞையிலும் சமூகமாற்றத்திலும் ஆர்வம் கொண்டோராகவும் தெளிவுடையவராகவும் இருக்கின்றனர். சிந்தனை விழிப்பு மட்டுமன்றி செயற்திறன் உடையோராகவும் இருக்கின்றனர்.
சமூகத்தின் பெரும் பகுதியாக பெண்கள் இருப்பதுபோல கல்வி கற்கும் நிலையிலும் பெண்களே இன்று கூடுதல் இடத்திலிருக்கிறார்கள். கல்வி மூலமான வேலைகளில் ஆரம்ப நிலை. இடைநிலை உத்தியோகம் பார்க்கும் பெண்களே அதிகமாக இருந்த நிலைமாறி உயர்நிலைகளிலும் தொழிநுட்பவியலிலும் இன்று அவர்கள் இடம் பிடித்து வருகிறார்கள். உடல் உழைப்பாளர்களாக விவசாயம் மற்றும் கூலி உழைப்பாளர்களாக இருக்கும் பெண்களும் தமது உரிமைகளிலும் உழைப்பு முறைகளிலும் தெளிவு பெற்று வருகின்றார்கள். சுமூக நிலைமை இதுவாக இருந்தாலும் பெண் சமத்துவம், பெண்விடுதலை குறித்த பெண்ணியம் பற்றிய தெளிவு அறிவும் சமூகமாற்றம் குறித்த சிந்தனையும் இந்தப் பெண்களிடம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவே நிலைமையுள்ளது.
மரபுகளால் கட்டுண்டு, பண்பாட்டு இறுக்கங்களுள் சிக்குண்டு அவற்றை விட்டு வெளிவரத் தயங்கும் மனோ நிலையுடையோராகவே இருhகள் இருக்கின்றனர். போராடும் தரப்பினரும் பெண் விடுதலை, பெண்ணியம் குறித்துச் சிந்திப்போரும் ஒருகுறியீடாகவே இன்றும் நமது சூழலில் இருக்கின்றனர். இது நமக்கும் புதிதல்ல. எந்த நல்ல விடயங்களிலும் சீரியலான செயற்பாடுகளிலும் நமது சமூகம் அப்படித்தானிருக்கிறது.
அக்கறை பூர்வமாக இயக்கம் தரப்பு குறைவாகவும் மந்தத்தனமுடைய தரப்பு கூடுதலாகவுமே உள்ள சமூக அமைப்பைக் கொண்டவர்கள் நாமென்பதால் நமது சூழல் அப்படித்தானிருக்கும்.
நமது கல்வி நமது சூழல் பற்றிய அறிவையோ அக்கறையையோ வழங்குவதில்லை. அதுபோல் தன்னைப் பற்றி அறியவும் உணரவும் கூடிய, தன்நிலை பற்றி தூர நோக்குடன் சமூகவியல் பண்பில் சிந்திக்கக்கூடிய ஆற்றலையோ பண்பையோ வழங்குவதுமல்ல. இந்நிலையில் கல்விக்கப்பாலன பொது அறிவூட்டல் சமூக அக்களினூடாகவே நாம் புதிய மலர்ச்சியை, சமூக அக்கறையை, தேடலை உருவாக்கவேண்டியுள்ளது. நமது எல்லா வகையதன சமூக வேலைத் திட்டங்களிலும் அவை முன்னைடுக் கப்பட்ட முறைகளிலும் இதனை நன்றாக அவதானிக்கலாம்.
சமூக சிந்ததனை என்பதே நிறுவனமயப்பட்ட கல்விக் கப்பாலான தனித்த புறம்பான ஒரு சங்கதியாகவே எப்போது மிருக்கிறது. அதேவேளையில் அத்தகைய புறநிலைச் சிந்தனையை செயற்பாட்டு ஆற்றலை நமது கல்வியும் அது சார்ந்த நிறுவனங்களும் ஏற்பதில்லை. அதேவேளை அதை விரோத நோக்குடனேயே பார்க்கின்றது.
நமது கல்வி தவிர நம் பண்பாடும் மரபுகளும் கூட இத்தகைய பலவீனங்களையும் குறைபாடுகளையும் கொண்டேயிருக்கிறது. வாழ்வை கல்வியும் பண்பாடும் கணிசமான அளவு தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பதால் இவற்றின் தாக்கம் இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது.
இந்த இரண்டு அம்சங்களும் முழச்சமூகத்தையும் பாதிப்பதுடன் பெண் வாழ்வையும் அதிகம் தாக்கத்துக்குட்படுத்துகின்றன. மரபின் குறைபாடுகளை உடைக்கக்கூடிய வல்லமையோடு துணிவையோ நமது கல்வி பெண்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே வழங்கவில்லை. ஆதே வேளை கல்விக் கருத்து நிலையிலும் பெண்ணை ஒரு இரண்டாம்தரப் பிரஜையாகவே வர்னிக்கப்படுகின்றது. கருதும்படி வைத்திருக்கின்றது. சமூக விதி முறைகள் நியமனங்கள் மரபுகளிலும் பண்பாட்டம் சங்களிலும் பெண் அடுத்தநிலைப் பிறவியாகவே கண்ப்பிடப் படுகிறாள். இவற்றை மீறும் துணிவைப் பெறும்விழிப்பு நிலைக்கு நாம் முழப்பெண்களையும் முழச் சமூகத்தையும் தயார்படுத்தவேண்டும். இந்தத் தயார்ப்படுத்தல் சிறு அளவிலாக இயங்கும் பெண் சிந்தனை வட்டத்தை மேலும் அகலமாக்கி முழு மனிதரிடத்தும் கலப்பதாகவேண்டும்.பெண் அடையாளத்தால் ஒடுக்கப்படும் பெண் மட்டும் தெளிவுபெற்றால் போதாது. ஓடுக்கும் முழச் சமூகமும் இந்தத் தெளிவைப் பெறவேண்டும். புதிய புரட்சிகர மாற்றத்துக்கான மனோ நிலைக்கு வளரவேண்டும். ஜனநாயகத்தின் உயரிய அம்சங்களால் புரிந்துகொண்டு அந்தத் தளத்துக்கு தன்னை விரிக்கும் பண்பைப் பெறவும் வேண்டும்.
போராடும் பெண் சமூகச் சிந்ததனையிலும் செயற்திறனிலும் தேசமாக முழமைபெற்று விரிந்திருக்கிறாள். வீட்டுக்குள், சுவர்களுக்குள், வேலிகளுக்குள் முடக்கப்பட்டும் முடங்கியுமிருந்த நிலையை விட்டு சமூகமாக, தேசமாக பரந்துவிட்டாள். சகல நிலைகளிலும் சமத்துவமாக ஆற்றலையும் அறிவையும் ஆளுமையையும் வெளிப்படுத்தி வருகிறாள். இந்த வெளிப்பாட்டினூடகா அவள் செய்து வரும் செயற் பிரகடனத்தின் பின்னும் நாம் மரபுகளின் பின்னும் பண்பாட்டுக் குறைபாடுகளின் பின்னும் வழமைகளின் பின்னும் இன்னும் இருண்ட பதுங்கு குழிகளை எத்தனை நாளைக்குத்தான் மனச்சாட்சிக்கு விரோதமாக வைத்திருக்கமுடியும்.
பாரம்பரியங்களிலும் மரபு வழமை பண்பாடு சடங்கு என்ற வளையங்களாலும் ஒடுக்குமுறைக்கு ஆதரவான கல்வித்தடுப்புச் சுவர்களாலும் சிறையிடப்பட்டிருக்கும் பெண் வாழ்வை மீட்கும் நடைமுறையின் தேவைபற்றிய தெளிவே இன்று எல்லோரிடத்திலும் வேண்டப்படுவது. பெண் விடுதலை என்றால் என்ன என்று அறியாத, ஏன் என்று உணராத நிலையே பெரும்பாலும் எமது சமூகத்தில் உள்ளது. பலரிடம் ஒருவித தவறான புரிதலும் விரோத மனப்பாங்குமே காணப்படுகின்றது.
நமது அறிவென்பது எத்தகைய பண்பையும் நாகரிகத்தையும் நமக்கு வழங்குகிறறது என்ற கேள்வியை பலரும் எழுப்புவதில்லை. ஓருவரை அடிமைப்படுத்துவதோ, அடுத்தநிலையில் வைத்திருப்பதோ கருதுவதோ எமது பண்பில் இருந்து எம்மைக் கீழிறக்கிவிடுகிறது. எம்மை நாகரிகமற்றவர்களாக்கி விடுகிறது.எம்மை அறிவற்றவர்களாக்கி விடுகிறது.
ஓரு அறிவார்ந்த சமூகம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒரு ஆரோக்கியமான சமூகம் தன்னுள்ளிருக்கும் குறைபாடுகளை நீக்கிவிடும். இதற்குப் பிரதானமாக வேண்டப்படுவதும் சிந்தனையும் சீரிய செயற்பாடும். உண்மையைக் கண்டறிவதும் நிலைமையை உணர்ந்து கொள்வதும் எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதும் அச்சமூகத்திற்கு அவசியமானது. நாம் இன்று இத்தகையதொ முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். புதிய வாழ்வுக்கான தொடக்கத்தில் புதிய பண்பாட்டுக்கான வேலைத்திட்டத்தில் இருக்கின்றோம்.
போராட்டமும் யுத்தமும் இருக்கும் தளைகளை அறுத்து புதிய வாழ்வை, விடுதலையைத் தருமென்பார்கள் ஆனால் எமது சூழலின் நிலையில் ஒருபக்கம் இந்த உண்மையைக் கொண்டிருந்தாலும் இன்னும் பெண் தொடர்பான அணுகுமறையிலிருந்து அதன் பாரம்hரியத் தன்மையை விட்டு புதிய பாதையில் பயணிக்க்கத் தயங்குகிறது என்பதே தோன்றுகிறது.
யுத்தம் சமூக நெருக்கடியை, பொருளாதார நெருக்கடியைத் தந்தாலும் நமது புலம்பெயர்வு ஏற்படுத்திய ஈடுகட்டல் எனடபது மீண்டும் பழமைகளையும் மரபையும் பேணிக்கொள்ள ஒருவகையில் இச்சமூகத்துக்கு உதவியளிக்கிறது. சீதனம் பெண் ஒரு அழகுப் பொம்மை. பெண் ஒரு இரண்டாம்தரப் பிரஜை என்ற மனப்பாங்கை இன்றும் காப்பாற்றிவருகிறது.
பெண் விடுதலை, பெண்ணுரிமை பற்றிய புதிய வியாக்கியானங்களையும் அவற்றின் நியாயப்பாடுகளையும் உண்மையையும் கண்டுகொள்ள விருப்பவதா, காணவேண்டியில்லாத நிலையையே இவை தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் இப்போது நமக்குள் முக்கிய பணியதார்த்தத்துக்குப் பொருத்தமான புதிய கருத்தூட்டல் உண்மை உணர்த்தல் விழிப்பும் ஆற்றல் வெளிப்பாடுமேயாகும்.
ஓருபக்கம் தேசமாக விரிந்திருக்கும் பெண் விடுதலை சிறகசைக்கும் பெண் சமூகமாய் மலர்ந்திருக்கும் பெண் இன்iனாரு பக்கம் கலாச்சாரம் என்ற வளையங்களுக்குள் ஒடுங்கிய பெண், மரபு என்ற வட்டங்களுக்குள் சுரண்டுகொண்டிருக்கும். பெண், வழமை னெ;ற சூத்திரத்துள் சுழலும் பெண், இந்த இரண்டு நிலையிலும் சமகாலத்தில் கொண்டிருக்கும் நமது சமூகம் எப்படி இனிப்பயணிக்க வேண்டும் என்பதே நமக்குள்ள தேர்வாகும்.
Mittwoch, August 13, 2003
விடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும்.......... கருணாகரன்.
Eingestellt von Chandravathanaa um 8/13/2003 02:51:00 PM 0 Kommentare
Labels: விடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும் அவளைச் சுற்றியுள்ள சமூக வேலிகளும்
பெண்ணின் கலாசாரம் - தாமரைச்செல்வி
ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட வாழும் முறை, அரசியல், கலைகள், ஆடை ஆபரணங்கள் போன்றவற்றிலுள்ள தனித்தன்மை அந்த சமூகத்தின் கலாச்சாரமாகக் கொள்ளப்படுகிறது. வாழும் காலங்களில் ஒரு இனம் அடையாளம் காட்டப்படுகிற தன்மையை இந்த கலாச்சாரம் பிரதிபலிக்கிறது. சமூகத்தில் உள்ள பெண்களின் நடைமுறை பாவனையே இதில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால் பெண்களது எண்ணங்கள், உணர்வுகள் செயற்பாடுகள் மனித வாழ்வை அவள் எவ வாறு வடிவமைக்க விரும்புகிறாள் என்பவற்றை அவளால் முழுமையாக சரியான விதத்தில் வெளிப்படுத்த முடிகிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே எம் கண்முன் நிற்கிறது. எந்த அளவுகோலுடன் இவள் இதைத் தீர்மானித்துக் கொள்கிறாள் என்பது இங்கே முக்கியமாகிறது.
இன்றைக்கு சமயம், கலை, பொருளாதாரம், இலக்கியம், தொடர்பூடகம், எனப் பல்வேறுபட்ட சகல கலாச்சாரச் செயற்பாட்டுத் தளங்களிலும் பெண்கள் ஈடுபட்டு வருவதை நாம் காண்கிறோம். ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் எனக்கருதப்படும் அபிவிருத்தி வேலைகள், தீர்மானம் எடுத்தல், ஒழுங்கமைத்தல், நிர்வகித்தல், தலைமை ஏற்றல் போன்ற செயற்பாடுகளில் இன்றைக்கு பல பெண்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எமது நாட்டில் நிலவிய போர்ச்சூழல் ஆண்களின் இயங்கு தளத்தில் ஓரளவு இடைவெளி ஏற்படுத்த}ய நிலையில் பெண்கள் வீட்டுக்குள் இருந்துவிடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை கண் முன்னாலேயே நாம் பார்க்கிறோம். இங்கே பெண்களின் பங்களிப்புக்கான தேவை ஏற்படுமிடத்து அவர்கள் வெளியே வந்து செயற்படுவதற்கான சாதகமான நிலை ஏற்படுகிறது. இவர்கள் தாம் சார்ந்த துறைகளின் செயற்பாடுகளில் இந்த கலாசாரத்தை எவ வகையில் பிரதிபலிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்த கலாச்சாரத்தின் பெறுமதி கவனத்தில் கொள்ளப்படுகிறது. பெண்களின் செயற்பாடுகளினூடாக கணிக்கப்படுகின்ற இந்த கலாச்சாரத்தை தீர்மானிக்கின்ற பொறுப்பும் பெண்களிடமே உள்ளதை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும . இந்தப் பொறுப்பை எத்தனை பெண்கள் சரியாக புரிந்துகொள்கிறார்கள். ஏதோ ஒரு அதிகார வர்க்கத்தால் பெண்கள் மீது திணிக்கப்பட்ட இந்த கலாச்சாரத்தின் தன்மை சரியானதுதானா என்று எத்தனை பேர் சிந்திக்கிறார்கள். இந்த விதமாக அமைந்து விட்ட இந்த கலாச்சாரத்தின் ஆடம்பரங்கள் பெண்களுக்குத் தேவையா? என்ற கேள்வி இன்று பலராலும் முன் வைக்கப்படுகின்ற கருத்தாகிறது.
பட்டாடைகளும் நகைகளும் ஆடம்பரமான சடங்குகளும்தான் எமது கலாச்சாரம் என்பதை ஏற்றுக் கொள்ளும் அறியாமையிலிருந்து நமது பெண்கள் விழித்துக் கொள்ள வேண்டும். நகையும் பட்டாடையும் ஆடம்பரமான வாழ்வும்தான் தனக்குப் பெருமைதரும் என்று பெண் நினைப்பாளேயானால் அது போன்ற முட்டாள்த்தனம் வேறு இல்லை. தன் கல்வியாலும் தன்னம்பிக்கையாலும் ஆளுமையாலும் மனிதப் பண்புகளாலும் ஒரு பெண் நிமிர்ந்து நிற்பாளேயானால் அதுதான் சமூகத்தில் அவளுக்கு பெருமை தரும் விடயம குறைந்த பட்சம் இந்த விதமாய் நிமிரும் பெண்கள் என்றாலும் தமது வாழ்வை எளிமையானதாகவும் ஆடம்பரமற்றதாகவும் ஆக்கிக்கொண்டால் சமூகத்தில் மற்றவர்கள் பின்பற்றகூடிய முன் உதாரணமாக திகழ்பவர்களாக இருக்க முடியும்.
போரினால் நலிவுற்றிருக்கும் நமது தேசத்தின் இன்றைய தேவை ஆடம்பரங்களை துறத்தல். எளிமையான வாழ்வை தேர்ந்தெடுத்தல். இது சாத்தியமாவது பெண்களின் செயற்பாட்டிலேயே தங்கியிருக்கிறது.
சமூகத்தில் எந்தப்பிரச்சனை என்றாலும் அதற்கு முகம் கொடுக்கும் பெரும் பொறுப்பு பெண்களுக்கே உள்ளது. அநேகமான பெண்களின் வாழ்நிலை சராசரிக்கும் கீழாகவே அமைந்துள்ளது. போரின் நடுவேயான பல இழப்புக்களை தாங்கியவர்களாகவே இவர்களில் பலர் இருக்கிறார்கள். இத்தகைய நிலைமையில் எமது கலாச்சாரங்களின் ஆடம்பரங்கள் சுமைகளாக அழுத்துவதை பெண்கள் அனுமதிக்கக் கூடாது. எமது இயற்கை வளங்களுக்கு பொருந்தக்கூடிய விதத்தில் எமது கலாச்சாரத்தை அமைக்கத் தவறினால் எமது இனம் பாரிய அழிவை எதிர் நோக்குவதை தவிர்க்க முடியாமல் இருக்கும்.
பொதுவாகவே பெண்கள் ஆடம்பரமோகம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது என்பதை பல பெண்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சமூகத்தில் பலவிடையங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாகவும் தம்மை அடையாளம் காட்டுகிறார்கள். பெண்ணே பெண்ணிடமிருந்து விடுதலை பெறவேண்டும் பெண்ணே பெண்ணை சமமாய் நடாத்த முன்வரவேண்டும்.
சகமனிதரை நேசிக்கும் மனிதப் பண்பையும் எளிமையான வாழ்வை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் எமது கலாச்சாரமாக பெண்கள் ஏற்றுக் கொள்வதே இன்றைய காலத்தின் தேவையாகிறது.
- தாமரைச்செல்வி -
Eingestellt von Chandravathanaa um 8/13/2003 02:48:00 PM 2 Kommentare
Labels: பெண்ணின் கலாசாரம்
போராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் பெண்.
போராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் பெண்களின் ஆளுமை
பெண்கள் காலம் காலமாக அடக்குமுறைக்குள்ளாவது பற்றியும், உரிமைகள் மறுக்கப்படுவது பற்றியும் இன்று பல்வேறு தரப்பினரும் விழிப்படைந்து வருகின்றனர். இதனையொட்டிய பல திட்டங்களும், செயற்பாடுகளும் தனிநபர்களாலும், சிறு குழுக்களாலும், நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஊடகங்களும் இவ விடயத்தில் சற்று விழிப்படைந்துள்ளது.
பால்நிலைக்கல்வி வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பனவும் நடந்தேறி வருகின்றன. இதனால் பெண்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளதுடன், தமது உரிமைகளைப் பெறும் வகையில் தம்மை முன்னேற்றவும் துணிந்துள்ளனர். மாற்றங்கள் படிப்படியாக நிகழத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெருந்தொகையான பெண்கள் இணைந்து போர்க்களம் செல்கிறார்கள் என்ற விடயம் தமிழீழ எல்லைக்குள் வாழ்பவர்கள் மட்டுமல்லாது இலங்கை முழுவதும் ஏன் உலகநாடுகள் முழுவதும் அறிந்தவோர் விடயமாகும்.
ஆனால் இவர்களின் வளர்த்தெடுப்புமுறை பற்றியோ, பயிற்சி பற்றியோ, களத்தில் போரிடும் திறன் பற்றியோ இவர்களின் ஏனைய செயற்பாடுகள் பற்றிய ஆழ அகலங்கள், ஒட்டுமொத்த ஆளுமைவிருத்தி பற்றிய விடயங்கள் வெளித்தெரியாத தொன்றாகவே இருந்து வந்துள்ளது.
ஆனால் தற்போதுள்ள அமைதியான சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் வடக்கு, கிழக்கிலுள்ள சிலஇடங்களில் நடத்திய தமிழீழ பெண்கள் பேரெழுச்சி நிகழ்வில் முதன்முறையாக தம்மை மக்களுக்கு அறிமுகப்படுத்த விளைந்துள்ளனர்.
இந்நிகழ்வு விடுதலைப்புலி உறுப்பினராக இணைந்து பல சாதனைகள் செய்து முதல் வீரச்சாவடைந்த 2ம் லெப். மாலதியின் நினைவு நாளான ஒக்டோபர் பத்தாம்திகதி நடாத்தப்பட்டது. இந்நாளையே விடுதலைப் புலிகள் தமிழீழ பெண்கள் தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இத்தினம் பற்றிய செய்தியே இதுவரை காலமும் பலராலும் அறியப்படாதிருந்தது.
10.10.2002 அன்று கிளிநொச்சியில் நடந்த மகளிர் பேரெழுச்சி நிகழ்வில் கலந்து கொண்டதில் என்னால் அவதானிக்க முடிந்தவற்றையும், ஏற்பட்ட மனப்பதிவுகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன்.
தமிழீழ பெண்கள் பேரெழுச்சி நிகழ்வின் முதலாவது நிகழ்வான இராணுவ அணிவகுப்பே பார்ப்போரை திக்குமுக்காடச் செய்து விட்டது. ஏனெனில் அத்தனை நேர்த்தியும் வேகமும் கொண்டதாய் ஒவ வொரு அணிகளும் சென்று மறைந்தன. புகைப்பிடிப்பாளர்களும், வீடியோ படப்பிடிப்பாளர்களும் இவற்றைத் துரத்திக்கொண்டு தமது கமறாத்திரைகளுக்குள் அடக்கப் படாதபாடுபட்டனர்.
மகளிரின் பதினொரு படையணிகள் இதில் பங்கேற்றன. இவையனைத்தும் ஓர் அடிப்படைத்தளத்துள் நின்றிருந்த போதும் ஒவ வொன்றும் தமக்கான தனித்துவங்களைக் கொண்டிருந்தன. அணிந்திருந்த சீருடைகளிலும், பிடிக்கப்பட்ட கொடிகளிலும், சின்னங்களிலும் ஒவ வொரு அணிகளும் தம்மை வேறுபடுத்திக் காட்டின.
ஓர் இராணுவ அணியின் வடிவமைப்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், பயன்படுத்திய மேலைத்தேயபாண்ட் வாத்திய இசைக் கருவிகளுக்கேற்பவும்
"புலிகளின் தாகம் தமிழீழத்
தாயகமென்றே நீ கூறு. "என்ற
விடுதலைக் கானங்களிலொன்று அணியின் வேக நடையின்போது இசைக்கப்பட்டது. பின்னர் மைதானத்துள் நடந்தமெதுவான அசைவுகளுக்கு 'எங்கள் தோழர்களின் புதைகுழியில்' என்ற பாடல் பொருத்தமாக அமைந்திருந்தது.
சிறு சிறு இடைவெளிகளில் கரடிப்போக்கு சந்தியில் ஆரம்பமான இவ வணிகள் கிளிநொச்சி மத்திய மைதானத்துள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து பெரும் பரப்பிலான இடத்தினைப் பிடித்து பெரும் இசைஎழுப்பி, பெரும் நகர்வினைப் புலப்படுத்தியது. இது சூழ நின்றிருந்தோரை பெரும் பரபரப்பிற் குள்ளாக்கியது.
இதனைத் தொடர்ந்து 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கையில் ஏ-9 பாதையூடான இராணுவ நகர்வினை எதிர்த்து மன்னகுளத்தில் பெண் போராளிகள் சமர் செய்ததன் 'மாதிரிச்சமர்' நிகழ்வொன்று நிகழ்த்திக்காட்டப்பட்டது.
பற்றைகளுக்குள்ளும், மரங்களுக்குள்ளும் நிகழ்த்திக் காட்டப்பட்ட இச்சமர் பெரும் வெடிச்சத்தங்களையும் துப்பாக்கிச் சூடுகளையும் கண்முன்னே காண்பித்தது.
மிகவும் தத்ரூபமான முறையில் நிகழ்த்தப்பட்ட இம்மாதிரிச்சமர், தமிழீழப் பெண்கள் படையணியின் இராணுவ வளர்ச்சியினையும் பலத்தினையும் காட்டி நின்றது. இது பெண்களின் உடல் உள ஆளுமை விருத்தியின் எல்லையினைக் கோடு காட்டியது.
பொதுவாக ஆசிய மரபில் வந்த பெண்கள் பயந்தவர்கள், மென்மையானவர்கள், நிதானமற்றுக் குழம்புபவர்கள், எதற்கும் தயங்கி நிற்பவர்கள், ஆண்களில் தங்கியிருப்பவர்கள், இலகுவில் அழும், சிரிக்கும் இயல்பு கொண்டவர்கள் என்ற கருத்துருவாக்கம், கணிப்பீடு அனைத்தையும் தகர்த்தெறியும் வகையில் தமிழீழப் பெண்கள் படையணி பெண்கள் உடல், உள ஆளுமை கொண்டுள்ளனர் என்பதனை இச்சமர் திட்டவட்டவமாக காட்டி நின்றது.
இவர்கள் தமிழீழ எல்லைக்குள் வாழும் பெண்களுக்கு மாத்திர மல்ல, உலகிலுள்ள பெண்கள் அனைவருக்குமே தன்னம்பிக்கையினையும், உற்சாகத்தினையும் வழங்கக்கூடியவர்கள் என்றால் அதில் மிகைப்பாடு ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன்.
மேலும் தொடர்ந்து நிகழ்ந்த கலைநிகழ்வுகள் மூலம் இவர்கள் பல்வேறு விடயங்களை மக்களிடம் முன்வைத்திருந்தனர். குறிப்பாக சாதாரணமாயிருந்த பெண்களாகிய தாம், காலத்தின் தேவையையும் கட்டாயத்தையும் அறிந்து போராட்டத்தில் இணைந்தது பற்றியும் தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தம் வளர்ச்சி நடந்தேறியது பற்றியும் குறிப்பிட்டனர்.
ஓர் இன ஒடுக்குமுறையில் ஆக்கிரமித்தல், ஆளுதலின் குறியீடாக சிங்களப் பேரினவாதம் தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தமை பற்றியும் இவ விடத்தில் பெண்கள் போர்க்களம் செல்லும் அவசியம் பற்றியும் வலியுறுத்தினர்.
மேலும் தாம் சும்மாயிருந்து சூம்லு}சூம் காளியென்று தாயத்துக் கட்டி அந்நியப் பேய்களை விரட்டவில்லை. நித்திரையற்ற இரவுகளை நிரந்தரமாக்கி உடலிலும், உள்ளத்திலும் பல வலிகளைத் தாங்கி, தியாகங்களை செய்து பெற்றதே இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை என்றனர்.
எனினும் நாம் மிகவும் சாதாரணமானவர்கள் எங்களைப் பற்றிய அதீத கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாதீர்கள் என்றனர்.
இக்கருத்தினை நிறுவுதற்போல் கூடியிருந்த பெருந்திரளில் சில விடயங்களை அவாதானிக்க முடிந்தது. சீருடையில் இருந்த பெண் போராளி ஒருவர் துவாயால் ஏந்திய ஒரு குழந்தையை மடியில் வைத்து பால் பருக்கிக் கொண்டிருந்தாள். பின்பு வாரியெடுத்து முத்தமிட்டு தோள்களில் போட்டுக்கொண்டாள்.
அது பெற்ற பிள்ளையா பிறர் பிள்ளையா என்ற ஆய்வுக்கு நான் போகவில்லை. அவளிடம் தாய்மை, அன்பு, பாசம் வெளிப்பட்டது. இதனை சீருடையில் கண்டபோதுதான் ஆச்சரியமாயிருந்தது. இருவேறு உன்னத நிலைகள் ஒருங்கே சங்கமித்தது. எனினும் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை இல்லை என்பதை புரிய முடிந்தது. இதனைவிட பெண் போராளிகள் சிலர் திருமணமாகி தம் கணவன் பிள்ளைகளுடன் வந்திருந்தனர்.
சீருடையில் நின்ற பெண் போராளிகள் பலர் எழுச்சி நிகழ்வுக்கு வந்திருந்த பலருடன் மகிழ்வாக உறவாடுவதைக் காணமுடிந்தது. சிறு பிள்ளைகளுடன் விளையாடியதையும் காணமுடிந்தது.
கலை நிகழ்வுகளிலும் பெண் போராளிகள் தமது திறமைகளை நிலைநாட்டினர். மிக அழகாக ஆடவும் பாடவும் தெரிந்திருந்தனர்.
களத்தில் நிற்கும் போராளி பரதநாட்டியம் ஆடுவது என்பது போராளி பற்றிய பொதுவான நினைப்பிற்கு முரணானது. சீருடையற்று பாத்திரங்களுக்கேற்ப ஆடையணிந்து ஆடிய போது இவர்கள் போர்வீரர்கள் என்ற எண்ணமே தோன்றவில்லை. சீருடையுடன் வரும் பாத்திரங்கள் பல பாவங்களை அபிநயித்து நடனமாடிய போதுதான் போர்வீரர்கள் பற்றிய புதிய பரிமாணம் பெறப்பட்டது.
மற்றும் இப்பேரெழுச்சி நிகழ்விற்கான ஒழுங்குபடுத்தல்கள் சிறப்பான முறையில் அமைந்திருந்தது. இந் நிகழ்வுக்காக ஏலவே கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், கிளிநொச்சி மத்திய மைதானத்தில் கூடும் ஒன்றரை இலட்சம் மக்களினதும் வீதிக் கட்டுப்பாடுகள், வாகனப் போக்குவரத்து ஒழுங்குகள், இரவு நிகழ்வு சூழலில் மின்விளக்கு வசதிகள், மைதான அலங்காரங்கள், மைதானத்தில் இடப்பட்ட பெரிய மேடையும் இடமும், மேடை வடிவமைப்பு, இசைக்குழுவினருக்கான தனிமேடை, முழுப்பார்வையாளருக்கும் நிகழ்வுகள் தெரியும் வகையில் வைக்கப்பட்ட பெரும் திரைகள், மேடையின் இரு மருங்கிலும் நிகழ்ச்சி செய்வோர் கூடும் தனியான தகரக்கொட்டகைகள்,
மைதானத்தில் மக்கள் ஒழுங்காக நிகழ்வுகளுக்கேற்ற வகையில் அசையும் முறைக்கான கட்டுப்படுத்தல் கோடுகள், குடிநீர் தாங்கிகள், மலசலகூட வசதிகள், ஒலி ஒளி ஏற்பாடுகள், நிகழ்ச்சி அறிவிப்புக்கள், ஊடகவியலாளர் ஆசன ஒதுக்கீடுகள், சிற்றுண்டி, குடிபான பரிமாற்ற ஒழுங்குகள் என்பன மிக நேர்த்தியாக மிக வசதியாக காலக்கிரமத்துக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இந்நிலை யுத்தத்தினால் முற்றாக அழிக்கப்பட்ட பிரதேசத்தில், வளங்களற்ற பிரதேசத்தில் ஒழுங்குபடுத்தல் என்பது பெரும் சவாலான விடயமே. இது மகளிர் படையணியின் மற்றுமொரு பக்கத்தினை, பொதுவிடயங்களை செயற்படுத்தும்திறனை, முகாமைத்துவதிறனைக் காட்டியது.
இப்பேரெழுச்சி நிகழ்வினை பெண்போராளிகளே பெரும்பாலும் நின்று நடத்திய போதும், விடுதலைப் புலிகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆண்போராளிகளும் இணைந்தே இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர்.
இவர்களிடையே ஆண், பெண் படையணி என்ற பிரிக்கப்பட்ட மனப்பாங்கு கிடையாது. இரு படையணிகளும் இணைந்தே பல காரியங்களை சாதித்து வருகின்றனர்.
ஆரம்ப மகளிர் படையணிக்கான பயிற்சிகளை ஆண் போராளிகளே வழங்கியுள்ளனர்.
இது தொடர்பாக ஆரம்ப கடற்புலி பெண் உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில் "ஆரம்பத்தில் கடற்படைத்தாக்குதல் தொடர்பான பயிற்சிகளை ஆண்போராளிகளே வழங்கினர். பின்னர் அவர்களிடம் பயிற்சி பெற்றுசிறப்புத் தளபதியாயிருந்த லெப்.கேணல் நளாயினி அக்கா என்பவரே எமக்கான பயிற்சிகளை வழங்கினார். அதன் வழியே பயிற்சிகள் தொடரப்படுகின்றன" என்றார்.
பெண்கள் இயல்பாகவே தொழில்நுட்ப அறிவும் நாட்டமும் குறைந்து காணப்படுகின்றனர். ஆண்களே இவ விடயங்களில் ஆர்வமாக விளங்குகின்றனர். காரணம் காலம் காலமாக ஆண்கள் வெளியில் சென்று பல்வேறு தொழில்முறைமைகளை பயின்றுவர பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளையும் வீட்டையும், சுற்றுப்புறச் சூழலையும் பராமரித்துக்கொண்டு ஓர் மாறுபாடற்ற வாழ்வு வாழ்ந்து வந்தமையாகும். ஆனால் கடற்புலி பெண் உறுப்பினர்கள் சிலர் இவ வெழுச்சி நிகழ்வில் தாக்குதல் படகொன்றினை மக்கள் பார்வைக்கு வைத்திருந்து அதன் இயக்கம் பற்றிய விளங்கங்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி பெண் உறுப்பினர்கள் தாக்குதல் படகு தயாரிப்பது பற்றியும், அவற்றை இயக்குவது பற்றியும் தொலைநோக்கு தொடர்பு அறிதல் பற்றியும், விமான எதிர்ப்புப் பீரங்கி, கடற்தாக்குதலுக்குரிய 50 கலிபர்கள் என்பவற்றின் இயக்கு முறைகள் பற்றியும், ஆங்காங்கே கொண்டுள்ள தகவல்மையங்கள் பற்றியும், இலக்குகளை இனம்காணல், கணித்தல், குறிவைத்தல் என்பவை பற்றியும், கட்டளை அதிகாரியின் செயற்பாடு பற்றியெல்லாம் பேசிய போதும் படகில்நிற்கும் தாம் ஒவ வொரு வரும் படகின் ஒவ வொரு விடயம் பற்றியும் கூறிய போது காலம் காலமாக பெண்கள் வளர்க்கப்பட்ட மரபில் வளர்ந்தவர்கள் தானே இவர்கள். இவர்களிடம் இத்தனை திறன் எப்படி வந்தது என்றே எண்ணத்தோன்றியது.
இவர்களிடம் "தற்போது நீங்கள் தாக்குதல்படகு, ஆயுதங்களைப் பற்றிய விடயங்களை வெளியிடுகிறீர்கள். எதிரி இதற்கேற்ற வகையில் தன்னைத் தயார்ப்படுத்தக்கூடும் என்ற அச்சம் இல்லையா?" எனக் கேட்டபோது.
கடற்புலி ஆரம்ப உறுப்பினரும், தொலைநோக்கு தகவல் அறிபவருமான பெண் ஒருவர் மிக நிதானமாகவும் சிறு அலட்சியமாகவும் சிரித்துவிட்டு "எமது படகுகளையும், ஆயுதம் பற்றியும் அறியலாமே தவிர எமது போர் முறைகளையோ, உத்திகளையோ அறியமுடியாது. அவற்றையும் சரியான மனவலிமையையும் தலைவர் எமக்குத் தந்துள்ளார். அவை இருக்குமளவும் எமது வெற்றி நிச்சயமானது" என்றாள்.
தமிழீழ பெண்கள் படையணியினது மிகுந்த கருத்தியல் தெளிவினையும், நிதானமான போக்கினையும் கொண்டு விளங்குகிறது என்பதனை இவர்களின் உரையாடல்கள் மூலமும் மகளிரணி அரசியல் பொறுப்பாளரான தமிழினி அவர்களின் உரை, பேட்டி என்பவற்றிலிருந்து புரியமுடிகிறது.
இவர்கள் தம்மைத்தாமே நிர்வகிக்கின்ற திறமையினையும், தமது செயற்பாடுகளைத்தாமே முன்னெடுக்கும்நிலையிலும் கட்டமைக்கப்படுவதனை ஒரு சில விடயங்கள் சுட்டிக்காட்டுகிறது.
இதில் மகளிர்படையணி உறுப்பினர்கள் ஒரு தீர்மானிக்கும் சக்திகளாக அரசியல் கட்டமைப்புக்குள் இருக்கின்றனர் என்பதே ஒரு முக்கிய விடயமாகும். மற்றும் பெண் போராளிகள் நடத்தும் பத்திரிகை-சுதந்திரப்பறவை, சஞ்சிகைகள் இங்கு வெளிவருவதும் பெண்களே தீர்மானிக்கும் முடிவெடுக்கும் நிலையில் இருப்பதனையும் தம்மை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் தமது கொள்கைகளை பிரகடனப்படுத்தவும், வளர்க்கவும் உதவியாக அமையும்.
இன்று இலங்கையில் பன்னாட்டு நிறுவனங்களது செறிந்த வியாபாரமோ-அதோனோடொட்டிய காலாச்சாரமோ, பல்வேறு ஊடக கலாச்சாரமோ, மலிகைப்படங்களின் பாதிப்போ இடம்பெறாத ஒரு தேசம் என்றால் அது வன்னிப்பெருநிலப் பரப்பாகவே இருக் கிறது.
இதனால் இங்கு இருக்கும் ஒவ வொரு விடயங்களும் தனித்துவமானதாகவும், சூழல்சார்ந்ததாகவும், நிலைத்து நிற்பதாகவும் வலுவுடன் விளங்குகிறது. இவ வகையில் தமிழீழப் பெண்களும் அவர்கள் வளர்த்தெடுப்பும் ஆரோக்கிய மானதாக அமைந்துள்ளது.
Eingestellt von Chandravathanaa um 8/13/2003 02:41:00 PM 0 Kommentare
Labels: போராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் பெண்.
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 5 கு. தீபா
போகுமிடமெல்லாம்,
கணவனில்லாமல் தனியே வாழும் பெண்கள் அடிக்கடி கண்ணில் பட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். தனது மனைவி பிள்ளைகளைத் துறந்து இன்னொரு பெண்ணுடன் கண்ணெதிரே வாழும் கணவன், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விட்டுப் பிரிந்து சென்று வேறொரு திருமணஞ் செய்து வாழும் கணவன், "வேலையாப் போனவர் வரேல்லை" என்ற காரணத்துடனான கணவன் என்று பலவிதக் கணவன்மார்களை இழந்து பல பெண்கள்.
பெருந்திரளான மக்கள் நெருங்கி வாழ்வதால் இவ விகிதம் கூடுதலாகத் தென்படுகிறதா அல்லது உண்மையிலேயே சமூகத்தில் சீர்கேடு மலிந்துவிட்டதா என்று ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும்.
பெண்களில் ஒரு சாரார் கணவனின்றித் தனித்து வாழும் துணிவைப் பெற, இன்னுமொரு சாரார் தனதும் குடும்பத்தினதும் கௌரவம் பேண வேண்டி அனைத்து வேதனைகளையும் தாங்கி மன அழுத்தத்திற்குள்ளாகின்றனர். அவர்களிற் சிலர் ஏதோ ஒருவகையில் அவ வழுத்தத்தை விடுவிக்கும் வகையில் மேலதிக உணவு, உடை, ஆபரணங்கள் என்று தமது கவனத்தைத் திருப்பிக் கொள்கின்றனர்.
ஒரு சிலர்அதுதான் என் தலைவிதி என்று வாழ முற்படுகின்றனர்.
மிகவும் மென்மையான போக்குடன் வளர்க்கப்பட்ட பெண்கள் புத்தி பேதலித்து போகும் சந்தர்ப்பங்களும் உண்டு. இருபது வயதுடைய இளம் பெண்ணொருவர் முன் சூல்வலியெனும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நோயுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் வயிற்றினுள் குழந்தை இறந்த நிலையில குழந்தை இறந்தது தாய்க்கு நன்மையே என அப்பெண்ணின் தாயாரும் ஏனையோரும் ஆறுதலுற்ற நிலையில் அவ விளம் பெண் மனநிலைப் பாதிப்புக்கு உள்ளானார். குழந்தை இறந்ததே அப்பெண்ணின் மனநிலைக் குழப்பத்திற்குக் காரணம் என்று ஏனையோர் நம்பியிருக்க உண்மை வேறாக இருந்தது. கணவனுக்கும் அப்பெண்ணிற்கு மிடையில் ஏற்பட்ட பிணக்கும் வைத்தியசாலையில் நோயுற்றிருந்த காலத்தில்கூட கணவன் வராததும் அப்பெண்ணின் மனநிலைக் குழப்பத்திற்குக் காரணமாக இருந்தது. மன நிலைக்குழப்பத்தில் கையில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் தாயின் மேல் எறிந்து "இவதான் எல்லாத்துக்கும் காரணம்" என்று கூறியபோது நானும் அதையே உணர்ந்தேன். தனது உடல்நிலை தொடர்பாகவோ, தனது பிள்ளை தொடர்பாகவோ எந்த முடிவையும் தானே எடுக்க முடியாது அனைத்திற்கும் தாயையே எதிர்பார்த்திருக்கும் வகையில் அப்பெண்ணின் வளர்ப்பு இருந்தது. வாழ்வின் ஏற்ற இறக்கங்களைத் தாங்கிக் கொள்ளும் திடமற்ற மென்மைப்போக்குடன் அப்பெண் வளர்க்கப்பட்டிருந்தாள்.
அதன் விளைவு!?
"என்ரை பிள்ளை வீட்டைவிட்டு வெளியிலை போகாள். அவவுக்கு ஆட்களைக் கண்டாப்பயம். வடிவாக் கதைக்கமாட்டா. சரியான சொப ற் அவ" என்று தன் பிள்ளையைப் புகழ்ந்து பிழையான பாதையில் வழிகாட்டும் தாய்மார் வெளியுலகையும், வாழ்வின் ஏற்ற இறக்கங்களையும் எதிர்கொள்ளும் திடமிக்க சிந்தனைத் தெளிவுடன் தமது பிள்ளைகளை வளர்த்தால் என்ன?
"உயர்கல்வி, உயர்தொழில், காதலித்தவனையே கைப்பிடித்த மகிழ்ச்சியான திருமணம், உயர்தர வாழ்க்கைமுறை, சமநிலையில் தன்னை மதித்து நடக்கும் கணவன், சிறிதும் பெரிதுமாகச் சிற்சில தனிப்பட்ட எதிர்கால இலட்சியங்கள் என என் வாழ்க்கை நம்பிக்கையூட்டுவதாகத்தான் இருந்தது. ஆனால் குடும்பத்தில் ஏற்படும் சிறு குழப்பங்கள், பிணக்குகளின்போது எனது கணவரின் விமர்சனங்கள் என்னை நிலைகுலைய வைக்கின்றன. எனது சமத்துவநிலை கண்டனத்துக்குரியதாகி என் நிலையைக் கேள்விக்குறியாக்குகிறது. என் நடத்தையையே சந்தேகத்திற்குரிய தாக்கிக் கேள்வி கேட்கும் கணவரை அனுசரித்துப் போவதையே நான் விரும்பவேண்டியிருக்கிறது. தவிர எனது பிரச்சினைகள் வெளியே எனது நெருங்கிய உறவுகளுக்குத் தெரிய வருவதுகூட எனது கௌரவத்திற்குப் பங்கம் என்பதால் என் மனதிற்குள்ளேயே வைத்துக்குமைந்து எந்நேரமும் நான் ஒரு மன அழுத்த நிலையிலேயே இருக்கிறேன்"
இது ஒரு குடும்பப் பெண்ணின் வேதனை மிகுந்ததொரு வாக்குமூலம். தனது நடத்தையையே கேள்விக்குள்ளாக்கி கணவன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் போது கூட அவனை விட்டுப் பிரியாதது 'தமிழ்ப் பெண்மை'.
நூற்றாண்டு காலமாக எமது பெண்களை ஆணை விடக்கீழான நிலையில் வைத்திருக்கும் மரபைக் கொண்டவர்கள் நாம். இந்நூற்றாண்டு காலக் கருத்துப்பதிவுகளைக் கணத்தில் தூக்கியெறிந்து சமூகம் மாறுவதென்பது சாத்தியமற்றதொன்றே. எனினும் சிறிது சிறிதாக மனப்போக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் எதிர்காலச் சந்ததியினரின் கருத்தமைவுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து புதியதொரு பரம்பரையை உருவாக்கும் என்று நம்புவோம்.
மேலே கூறிய பெண்ணைப் போன்று தன் நிலையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பெண்கள் சமூகம் ஒன்று உருவாவது ஒரு மாற்றத்தின் அறிகுறியே. ஏனெனில் இதுவரை காலமும் நம் பெண்கள் குடும்பத்தில் தம் நிலை என்ன என்பதையே அறிந்தவர்களாக இருக்கவில்லை. தாமும் சமநிலையில் மதிக்கப்படவேண்டும், தமது தன்மானம் கேள்விக்குள்ளாக்கப்படக்கூடாது என எதிர்பார்க்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு பெரிய மாற்றமே. கல்வியறிவு பெற்ற தொழில் பார்க்கும நடுத்தரவர்க்கப் பெண்கள் முன்மாதிரியாக நடந்து கொள்வதைவிட இப்போதெல்லாம் கீழ்த்தட்டு வர்க்கப் பெண்கள் முன்மாதிரியாக நடந்து கொள்வது அதிகமாகவே உள்ளது.
நீதிமன்றங்கள் பெண்ணின்பால் இரக்கங்கொண்டு அளிக்கும் தீர்ப்புகளை மறுதலித்து தமக்குத்தாமே தீர்ப்பு வழங்கிக் கொள்ளும் புதுயுகப் பெண்களாக அப்பெண்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எனது கணவன், எனது உரிமை, அவன் என்னுடனேயே வாழ வேண்டும் என்று இடையில் வந்த இன்னொரு பெண்ணுடன் உரிமைப்போர் நடத்திக் கணவனை மீட்டு வந்த காலம் போய், 'என்னை மறந்து இன்னொரு பெண்ணுடன் சென்றவன் எனது கணவனல்ல, அவன் எனக்கு வேண்டாம ' என்று மறுக்கும் துணிச்சலுள்ள பெண்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள்.
இரண்டு பிள்ளைகளின் தாயான ஒரு பெண், இளமையும் துடிப்பும் வேலையில் ஆர்வமுமிக்க அப்பெண்ணின் நெற்றி எந்தவித அடையாளமுமின்றி எப்பொழுதும் வெறுமையாகவே இருக்கும். திருமணமாகாத சிறுபெண் என்று எண்ணியிருந்த எனக்கு அப்பெண் திருமணமானவர் என்ற உண்மை ஆச்சரியமளித்தது. அத்திருமணத்தின் சோக முடிவுரை சிறிதளவுகூட அப்பெண்ணின் முகத்தில் தென்படாதது அதைவிடப்பெரிய ஆச்சரியம். "இன்னொரு பொம்பிளையோட அவருக்குப் பழக்கம் இருந்ததக்கா. கனநாளா எனக்குத் தெரியும். தெரியாதது போல பொறுத்துப் போனனான். ஆனா வரவர எனக்கு அடி, பேச்சு என்று ஒரே பிரச்சினை. காசு கொண்டு வா என்று ஒரே கரைச்சல். அவவுக்குக் கொடுக்கிறதுக்காக. நான் என்ரை உரிமையை வெளிக்காட்ட வேண்டுமென்றதுக்காக நீதிமன்றில் கேஸ் போட்டனான். கேஸ் என்ரை பக்கமாத்தான் தீர்ந்தது. ஆனா நான் சேர்ந்து வாழமாட்டன், அவவோடை போகட்டு மென்று சொல்லிப் போட்டன். பிள்ளையளுக்குக் கொஞ்சக் காசு கட்டச்சொல்லி கோர்ட் சொன்னது. நான் அதுவும் வேண்டாமென்று சொல்லிப்போட்டன். பிச்சை எடுத்தென்றாலும் என்ரை பிள்ளையளை நான் வளர்ப்பன்" தெளிவும் உறுதியுமாக வெளிவந்தன வார்த்தைகள். அந்தத் தெளிவும் உறுதியும்தான் அந்தப்பெண் அமைதியாக சந்தோசமாக வாழ்வதன் ஆதாரம். இத்தெளிவு எத்தனை பேருக்குக் கைவரும்.
'திருமணமே ஒரு பெண்ணின் வாழ்க்கையின் இறுதி இலக்கு' என்ற சமூகத்தின் கருத்துப்படிமம் திருமணம் தவிர்ந்தும் ஒரு வாழ்க்கை உள்ளது என ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை எமது பெண்களுக்கு வழங்கவில்லை.
பெரும்பாலான பெண்கள் நிலையான, நிறைவான திருமண வாழ்க்கையை விரும்பும் போக்கு சரியானது, யதார்த்த பூர்வமானது. ஆனால் அநீதிகளும் கொடுமைகளும் இழைக்கப்படும்போது அவர்களின் வாழ்வு அத்துடன் முடிந்துவிடக்கூடாது. அதிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும், அவற்றினால் நிலைகுலைந்து போய்விடாமல் வாழ்வின் தொடர்ச்சியை திடமான மனதுடன் தாம் விரும்பிய வண்ணம் அமைத்துக் கொள்ளவும் அவர்கள் துணிவு பெற வேண்டியிருக்கிறது.
- கு.தீபா -
Eingestellt von Chandravathanaa um 8/13/2003 02:35:00 PM 0 Kommentare
Labels: சிகரங்களைத் தொட்ட பின்னும்
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 4 கு. தீபா
சமூகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் வெறும் வம்புக்கு வாய்ப்புத்தரும் சம்பவங்களாகாமல் முற்போக்கான மாற்றம் ஆக வேண்டுமானால் முதலில் நாங்கள் - பெண்கள் மாறவேண்டும். பாதிக்கப்படும் பெண்ணைப் புரிந்துகொள்ளாமல், அவளின் நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் மேலும் அவளுக்கு வேதனையை வழங்கும் இத்தகைய
போக்கு மாறவேண்டும். புரிந்துணர்வுள்ள பெண் சமூதாயமொன்று உருவாவதன் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும்.
வீடும் நாடும் வளம்பெறும்
பெண்ணிலை மாற்றம் தொடர்பாகப் பலரும் பலவிதமான கருத்துக்களையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனினும் இவர்கள் யாரது கருத்திற்கும் எட்டாமல் சத்தமேயில்லாமல் புரட்சி ஒன்று நடந்துகொண்டுதானிருக்கிறது. தாங்கள் ஒரு புரட்சி செய்வதை அப்பெண்கள் அறியாமலிருப்பதும், அப்பெண்ணின் புரட்சிகர நடவடிக்கையைச் சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் போவதோடு அதனை விமர்சிப்பதும் அத்தகைய புரட்சியை மேற்கொள்ள பிறபெண்கள் முயலாததற்குக் காரணமாக அமைகிறது.
கல்வியறிவு, பொருளாதாரப்பலம் என்பனவற்றையெல்லாம் மீறி ஒரு பெண்ணின் தன்மானம் கேள்விக்குள்ளாக்கப்படும் போது, அப்பெண் பொங்கியெழும் சம்பவங்கள் இடம்பெறினும் பின்னர் அப்பெண்ணுக்குப் போதிய ஆதரவு சமூகத்திலும் குடும்பத்திலும் கிடைக்காமற் போவது அப்பெண்ணை குற்றவுணர்விற்கு உள்ளாக்குகிறது. தான் காதலித்த ஒருவனை ஒரு பெண் மறுக்கத் தலைப்படும்போது, அப்பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாகிறது. சமூகத்தின் அப்பார்வை ஆணிண் அடக்கு முறைகளுக்குப் பெண்ணைப் பணிந்து போகச் செய்கிறது.
தான் காதலித்த ஒருவன், 'சீதனமில்லாமல் வீட்டுக்காரர் கல்யாணம் செய்யவிட மாட்டினமாம்' என்று தன் காதலைப் பெற்றோரைக் காட்டி விலை பேசிய போது, அவனைத் திருமணம் செய்வதற்காக இரண்டு வருடங்கள் உழைத்துப் பணம் சேர்த்தார் ஒரு பட்டதாரிப்பெண். இரண்டு வருடக் கடின உழைப்பின் பின் பணத்திற்காக என்னை மறுதலித்த ஒருவன் என்ற எண்ணம் மனதில் விதைக்கப்பட்ட பின்னும் அப்பெண் அவனை மணக்கத் துணிந்தது காதலுக்காகவல்ல, குடும்பத்தின், சமூகத்தின் நிர்ப்பந்தத்திற்காகவே. தான் அவனை மறுப்பின் தனதும் தன கீழுள்ள சகோதரிகளினதும் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்படும் என்ற நிலையில் அப்பெண் மனதில் தோன்றிய வெறுப்புடனேயே மணவாழ்க்கைக்குள் நுழைகிறாள்.
இன்னொரு பெண்ணோ பலவருடங்களாகத் தன்னை விரும்பிய ஒருவன் சீதனம் வேண்டித் தன்னை மறுத்த போது, அவனை மறுக்கும் உரிமை தனக்குமுண்டென உணர்ந்தாள். திருமண தினத்தன்று அருட்தந்தை 'இவரைத் திருமணம் புரியச் சம்மதமா?' என வினாவியபோது அவனை மறுத்தாள். 'தான் செய்தது சரியே' என்ற நிமிர்வுடன் அவள் வெளியேறிச்சென்ற போது அந்த 'நிமிர்வு' சமூகத்தின் பார்வையில் 'திமிர்' ஆனது. அந்த நிமிர்வை அவள் தொடர்ந்து பேண முடியாத வகையில் குடும்பமும் சமூகமும் அவளை நிந்தித்தபோது 'நீ செய்தது சரியே' என அவளைத் தட்டிக்கொடுத்து உளப்பூர்வமான ஆதரவைத் தர யாரும் வராத நிலையில், பிறப்பாலும் வளர்ப்பாலும், 'ஒரு தமிழ்ப்பெண் இப்படித்தான் இருக்கவேண்டும்' என்றூட்டப்பட்ட உணர்வுகளே அவளை மனச்சிதைவு நிலைக்குள்ளாக்கியபோது அவளது புரட்சி பயனற்றதாகிப்போனது.
சூழ நின்ற சமூகம், அப்பெண்ணிற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மன வேதனையையும், அதன் பலனாகவே எதிர்காலத்திலும் தன் திருமண வாழ்வைக் கேள்விக்குறியாக்கும் இத்தகைய முடிவையெடுக்க அவள் துணிந்தாள் என்பதையும் புரிந்துகொள்ளாது. 'ஒரு பொம்பிளை இப்பிடியே நடக்கிறது' எனக் கடுமையாக விமர்சித்தது. மறைமுகமாக 'ஒரு ஆம்பிளை செய்தாலும் பரவாயில்லை' என்ற கருத்தும் வெளிப்படுத்தப்பட்டது. தன் தன்மானத்திற்கு விழுந்த அடியைத்திருப்பிக்கொடுக்க முனைந்த அவள் நிமிர்வு 'அவளுக்கு ஆணவம் தலைக்கேறிப்போச்சு' என விமர்சிக்கப்பட்டது. இத்தகைய விமர்சனங்கள் அப்பெண்ணைத் தன்னுள் மேலும் ஒடுங்கச்செய்தது. இப்பெண்ணுக்கு உளப்பூர்வமான ஆதரவைக் கொடுத்து இனிவரும் வாழ்க்கையை அவள் நம்பிக்கையுடன் வாழ வழிகாட்டப்போவது யார்?
பெண்கள் துணிச்சலான முடிவுகளை எடுத்துத் தமது வாழ்வைத் தாமே தீர்மானிக்கத் தயங்குவதற்குச் சமூகத்தின் இத்தகைய விமர்சனங்களே காரணமாக அமைகின்றன.
எதிர்பார்க்காத இடத்தில் இன்னொரு பெண்ணைச் சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண்ணின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் 'இந்தப் பெண்ணிடம் இவ வளவு தெளிவா? என ஆச்சரியப்படவைத்தன. பதினேழு வயதுடைய அப்பெண் கல்வியறிவோ, பொருளாதாரப் பலமோ அற்றவள். ஒரு வயதுக் குழந்தையை இடுப்பில் ஏந்திய வண்ணம் வந்த அப்பெண்ணை ஏனைய பெண்கள் நோக்கியவிதம், சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத செயலொன்றை அவள் புரிந்திருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அப்பெண்ணுடன் தனியே பேசமுற்பட்ட எனக்கு அப்பெண்மேல் பெருமதிப்பு ஏற்பட்டது. திருமணம் செய்வான் என்ற நம்பிக்கையில் ஒருவனிடம் தன்னை இழந்து கர்ப்பிணியானாள். திருமணம் செய்ய அவன் மறுத்தபோது நீதிமன்றத்தை அணுகினாள். அவளைத் திருமணஞ்செய்யும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது அப்பெண் எடுத்த முடிவு வியக்கத்தக்கது.
'என்னை ஏமாத்தினவனை ஏனக்கா நான் கல்யாணம் செய்யவேணும்? என்ரை பிள்ளைகளுக்குத் தகப்பன் ஆரெண்டு சனத்துக்குக் காட்டத்தான் நான் கோர்ட்டிற்குப் போனனான்' சுயமரியாதை மிக்கதொரு பதில். சமூகத்தினரால் ஏற்கமுடியாத பதில். ஏனெனில் சமூகத்தின் பார்வையில் அவள் நடத்தை சரியில்லாதவள் பிள்ளை, தகப்பன் பேர் தெரியாத பிள்ளை. கூலி வேலைக்குச் சென்று தன் மகனை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அப்பெண்ணை அவளைச் சூழவுள்ளோர் மதிக்கத் தவறியதேன்?
அரச திணைக்களமொன்றில் தொழில் புரியும் பெண்ணொருவர் சோகம் ததும்பிய முகத்துடனேயே தினமும் வேலைக்கு வருவார். எந்நேரமும் 'அவர்லு} அவர்லு}' என்று தனது கணவரைப்பற்றியே ஏதாவது கூறிக்கொண்டிருப்பார்.
சிறிது காலமாக எதுவும் பேசாது அப்பெண் அமைதியாயிருந்தது ஆச்சரியமளித்தது. 'என்ன கதையையே காணேல்லை' என்ற கேள்விக்குப் பதிலாக அப்பெண் கண்ணீர் உருக்கத் தொடங்கினாள்.
திருமணம் செய்த நாளிலிருந்தே 'நான் உன்னை வீட்டுக்காரரின்ரை ஆய்க்கினைக்காண்டித்தான் கட்டினனான்' என்று சண்டைபிடித்து அப்பெண்ணை உளவியல் ரீதியான வன்முறைக்குள்ளாக்கிய அவளது கணவன், அச்சண்டையின் உச்சக்கட்டமாக குழந்தையைப் பிரசவித்த பதினான்காம் நாள் தனது அடிவயிற்றில் அடித்தததாகக் கூறி 'இப்பவும் அடி வயிற்றிலை அந்த வலி நிரந்தரமாத் தங்கீற்றுதக்கா' என்று அழுதாள்.
அண்மையில் தனது கணவன் ஒரு பெண்ணை வீட்டிற்கே அழைத்து வந்ததைக் கூறியபோது, வேதனையிலும் அவமானத்திலும் அவள் முகம் கன்றியது. 'என்னாலை அந்த அவமானத்தைத் தாங்க முடியேல்லையக்கா அப்பவே பிள்ளையைத் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டை போயிட்டன். தாயும் மகனுமாவந்து நிற்கினம். மணவிலக்குத் தரட்டாம், சீதனமா வாங்கின காசைத்திருப்பித் தாங்கோ, மணவிலக்குத் தாறன் என்று சொல்லிப்போட்டன். என்ர காசை ஏனக்கா நான் விடுவான்' என்று ஆவேசப்பட்டாள். இவ வளவு துணிச்சலும், தன்னம்பிக்கையும் உரிமைக்காகப் போராடும் குணமும் இந்தச் சின்ன உருவத்தினுள்ளா என்ற ஆச்சரியங்கலந்த மௌனத்தில் இருந்த என்னை 'என்னக்கா! நான் செய்தது பிழையே, நீங்களும் பேசாமல் இருக்கிறீங்கள்?' என்று கவலை தொனிக்க வினாவினாள். சுற்றமும் உறவும் ஏற்படுத்திய கண்டனங்களும், விமர்சனங்களும் உளாPதியான ஆதரவைத் தேடும் மனோநிலையை அவளுள் ஏற்படுத்தியிருப்பதை உணர்ந்து ஆதரவுடன் அவள் கைகளைப் பற்றினேன். 'மூன்று வருட காலமாக வேதனையை அனுபவித்த உங்களுக்குத்தான் நீங்கள் எடுத்த முடிவின் பரிமாணம் தெரியும். நீங்கள் சரியான முடிவையே எடுத்திருப்பீர்கள். மற்றவர்களின் விமர்சனத்தையிட்டுக் கவலைப்படாதீர்கள்' என்று கூறினேன்.
'மூன்று வருடத்தில் எனது திருமண வாழ்க்கை முறிந்தது எனக்கு எவ வளவு வேதனையாயிருக்கும் என்று இந்தச் சனத்திற்கு ஏனக்கா விளங்குதில்லை?' என்று கண்ணில் நீருடன் வினாவினாள். 'உங்கள் வாழ்க்கை உங்கள் பொறுப்புத்தான். நீங்கள் யாருக்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய தேவையில்லை. பிள்ளையை நல்லவனாக வளர்ப்பதில் கவனத்தைச் செலுத்துங்கள்' என்று மட்டுமே என்னால ஆறுதல் கூறமுடிந்தது.
சமூகத்தில் இடம்பெறும் இத்தகைய சம்பவங்கள் வெறும் வம்புக்கு வாய்ப்புத்தரும் சம்பவங்களாகாமல் முற்போக்கான மாற்றம் ஆக வேண்டுமானால் முதலில் நாங்கள் - பெண்கள் மாறவேண்டும். பாதிக்கப்படும் பெண்ணைப் புரிந்துகொள்ளாமல், அவளின் நடவடிக்கைகளை விமர்சிப்பதன் மூலம் மேலும் அவளுக்கு வேதனையை வழங்கும் இத்தகைய போக்கு மாறவேண்டும். புரிந்துணர்வுள்ள பெண் சமுதாயமொன்று உருவாவதன் மூலமே சமூகத்தில் மாற்றங்கள் நிகழும். வீடும் நாடும் வளம்பெறும்.
-கு. தீபா
Eingestellt von Chandravathanaa um 8/13/2003 02:31:00 PM 0 Kommentare
Labels: சிகரங்களைத் தொட்ட பின்னும்
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 3 கு. தீபா
கல்வியறிவின்மை, தொழிலின்மை, தன்கையில் பொருளாதாரப் பலமின்மை இவற்றோடு இவற்றால் ஏற்படும் தன்னம்பிக்கையின்மை என்பன ஒரு பெண் ஆணில் தங்கி வாழ்வதற்கான பிரதானமான காரணங்களாக அமைகின்றன. தன்னையும் பிறக்கப்போகும் தன்பிள்ளைகளையும் பேணிப்பாதுகாப்பான் எனும் நம்பிக்கையுடன் தன்தங்கி வாழ்தலை ஆரம்பிக்கும் பெண் தன்கனவுகள் பொய்த்து குடும்பம் சீரழியும் நிலையை அடையும் போதும்கூட அத்தங்கிவாழ்தலிருந்து மீள முடியாமல் போவதுதான் மிகக்கொடுமை. சில பெண்கள் அதற்கும் மேலே போய் பொறுப்பற்றிருக்கும் கணவனின் சுமையையும் சேர்த்து இளம்பிள்ளைகளின் கைகயில் கொடுப்பதும் இன்று சமூகத்தில் மலிந்து போய்க்காணப்படும் ஒரு விடயமாகிவிட்டது.
'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்' என்ற சொற்பதம் வழக்கொழிந்துதான் போய்விட்டது. எனினும் வெறும் கல்லாகவும் பதா புல்லாகவும் இருப்பவா களையெல்லாம் கணவன் என்று தொழுது நிற்கும் பெண்களின் மனநிலையில் மாற்றம்தான் இல்லை.
கல்வியறிவின்மை, தொழிலின்மை, தன்கையில் பொருளாதாரப் பலமின்மை இவற்றோடு இவற்றால் ஏற்படும் தன்னம்பிக்கையின்மை என்பன ஒரு பெண் ஆணில் தங்கி வாழ்வதற்கான பிரதானமான காரணங்களாக அமைகின்றன. தன்னையும் பிறக்கப்போகும் தன்பிள்ளைகளையும் பேணிப்பாதுகாப்பான் எனும் நம்பிக்கையுடன் தன்தங்கி வாழ்தலை ஆரம்பிக்கும் பெண் தன்கனவுகள் பொய்த்து குடும்பம் சீரழியும் நிலையை அடையும் போதும்கூட அத்தங்கிவாழ்தலிலிருந்து மீள முடியாமல் போவதுதான் மிகக்கொடுமை. சில பெண்கள் அதற்கும் மேலே போய் பொறுப்பற்றிருக்கும் கணவனின் சுமையையும் சேர்த்து இளம்பிள்ளைகளின் கைகயில் கொடுப்பதும் இன்று சமூகத்தில் மலிந்து போய்க்காணப்படும் ஒரு விடயமாகிவிட்டது.
கல்வியறிவும், பொருளாதாரப்பலமும் இன்மையால் வாழ்வதற்கான தன்னம்பிக்கையற்று பெரும்பாலான பெண்களிருக்க கல்வியறிவும், பொருளாதாரப் பலமுமிக்க பெண்களும் வாழ்வதற்கான தன்னம்பிக்கையை இழப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது அடிப்படையிலேயே பெண்ணுடைய மனதில் 'நான் பெற்றோரிலும் சகோதரர்களிலும் பின்னர் கணவனிலும் சார்ந்து வாழவேண்டியவள்' எனும் எண்ணக்கரு ஊட்டப்படுதல் காரணமாகவே ஏற்படுகிறது.
பெண்களின் கருத்தமைவில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலமே இந்நிலைமையை மாற்றியமைப்பது சாத்தியமாகும். இளம் பெண்களின் மத்தியில் கருத்து மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நாளைய சந்ததியை சிறந்த தன்னம்பிக்கை மிக்க சந்ததியாக உருவாக்க வேண்டும். ஏனெனில், ஒரு தாயே குடும்பத்தில் சகலதுமாகிறாள்.
அப்பெண்ணின் முன்னைய கர்ப பசரிதைகள் 'பாரப்பெண்' என நிமிர்ந்து பார்க்கவைத்தது. 33 வயது தோற்றமோ, நாற்பதைத் தாண்டி நின்றது. ஏழாவது கர்ப்பம். ஏழ்மையும் ஏழ்மையினால் அதிகரித்துக் காணப்பட்ட முதுமையும் முகத்தில் கோலமிட்டன. பரிசோதனை முடிவுகளோ ஆபத்தின் அறிகுறிகளாக இருந்தன. உயர்குருதியமுக்கம், கணுக்கால்களில் அதிகவீக்கம், சலத்தில் புரதவெளியேற்றம், மங்கிய கண் பார்வை என அவற்றின் தாக்கம் அதிகளவில் இருந்தது. உடனடியாக அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியத்தை மருத்துவ மாதுக்கள் உணர்ந்தனர்.
"அம்மா! உடனை ஆஸ்பத்திரிக்குப் போங்கோ" என்று அம்மாவை அவசரப்படுத்தினர்.
"இல்லைப் பிள்ளை. நான் போய் ஆஸ்பத்திரியிலை இருக்க ஏலாது" என்ற அத்தாயின் பதில் அனைவரிற்கும் அதிர்ச்சியாக இருந்தது.
"அம்மா உங்களுக்கு என்னென்ன பிரச்சினை இருக்கென்றும் அதாலை முன்சூல்வலி என்ற நோய் வர இருக்கென்றும் வடிவா விளக்கமாகச் சொல்லிப்போட்டம். உடனை நீங்கள் ஆஸ்பத்திரிக்குப் போகவேணும்"
"எனக்குப் பிள்ளைகளைப் பார்க்க ஆளில்லை. எனக்குப் போக ஏலாது" என்ற அத்தாயின் நிலை மனதை வருத்தினாலும் அவர்கள் விடவில்லை.
"அம்மா, உங்கடை அவரோடை விட்டிட்டுப் போங்கோ" என வழிகாட்ட முனைந்தனர்.
"அவர் பார்க்க மாட்டாருங்கோ. அவர் ஒரே குடி. இப்ப இரத்தமாகவும் போகுது. உழைப்புமில்லை. என்னை ஓரிடமும் போக அவர் விடமாட்டார்" "உங்கடை மகள் பார்ப்பாதானே. விட்டுட்டுப்போங்கோ" என்று கூறியபோதும் பதின்நான்கு வயதுச் சிறுமி பிள்ளைகளைப் பார்ப்பாளா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. எனினும் அச்சந்தேகத்தைத் தகர்த்தது அத்தாயின் பதில். "அவதான் விறகுகட்டிக் கொண்டுவந்து குடுத்து உழைக்கிறவா"
தீர்க்க முடியாத பல சிக்கல்களை அத்தாய் பதிலாகத் தருவதை உணர்ந்தும், "அம்மா, உங்கடை பிள்ளையளை நீங்கள் ஆஸ்பத்திரியாலை வரும்வரைக்கும் பராமரிக்க நாங்கள் ஒழுங்கு பண்ணுறம் நீங்கள் ஆஸ்பத்திரிக்குப் போங்கோ" எனும் பெரும் உதவியைச் செய்ய மருத்துவ மாதுக்கள் முன்வந்தனர்.
"இல்லையுங்கோ, அவர் விடார். சொந்தக்காரர் வீட்டை போகவே விடமாட்டார்" என்ற பதில் முகந்தெரியாத அக்கணவன் மீது கோபத்தை ஏற்படுத்தியபோதும் அப்பெண்ணின் நிலைக்கு இரங்கி "அப்ப நீங்கள் என்னம்மா செய்யப்போறீங்கள்?" என்ற கேள்விக்கு, "அது எனக்கு ஒன்றும் நடக்காதுங்கோ. கடவுள்விடார்" எனும் அறியாமை மிக்க பதிலைச் சொல்லி சலிப்புடன் வாயை மூடவைத்த பெண்ணின் நிலை என்ன?
பொறப்பற்று, பிஞ்சு மகளை உழைப்பிற்கனுப்பி, குடித்து, கௌரவம் என்ற பெயரில் தன் சுயநலத்திற்காய் மனைவி பிள்ளைகளை அடிமையாய் வைத்திருக்கும் அக்கணவனை இனங்காணத் தெரியாத, சுயமாய் முன்னின்று உழைத்துக குடும்பத்தைச் சீரழிவிலிருந்து காக்கத் தெரியாத அப்பெண் தன் மகளுக்குக் கற்றுக் கொடுக்கப் போவது எதனை? பதின்நான்கு வயதில் விறகு சுமக்கும் அச்சிறுமி அச்சுமையிலிருந்து விடுபடவென பதினாறு வயதில் திருமணம் செய்து, தான பெறப்போகும் மகளுக்கும் இதையேதான் கற்றுக்கொடுக்கப் போகிறாள். சங்கிலித் தொடராய் சந்ததிகளுக்குக் கடத்தப்படும் இவ வெழுதா மரபை எங்கே? யார்? முறித்தெழுதப் போகிறார்கள்?
தான் தனது சொந்த மச்சானையே மணந்ததையும், அவனது அடி, உதை தாங்காமல் மூன்றாம் மாதமே பூநகரியிலிருந்து கால்நடையாய் புதுக்குடியிருப்பு வந்ததையும் கதைகதையாய் சொல்லிக் கொண்டிருந்தாள் அவ விளம்பெண். பசியோட தான் நடந்து வந்த கதையை அவள் கூறக்கேட்டு நான் "பாவம் வாழ்க்கையில் நிறைய அனுபவப்பட்டுவிட்டாள். இனித்திருமணமே செய்து கொள்ளமாட்டாள்" என மனதுள் எண்ணிக் கொண்டேன்.
இதன்பின்னர் இரண்டு மாதங்களே சென்றிருக்கக்கூடும். ஒரு நாள் நள்ளிரவில் அப்பெண் ஒருவனோடு வீட்டைவிட்டு வெளியேறியிருந்தாள். கையில் பச்சைக் குழந்தையுடனும், அருகில் இரண்டு வயதுக் குழந்தையுடனும் கண்ணில் நீருடனும் வந்திருந்த பெண் அவனின் மனைவியென அறிந்து நான் திகைத்துப் போயிருந்தேன். வீடுவீடாக "அவரைக் கண்டனீங்களோ" என வெட்கமும் துக்கமும் அலைமோத அப்பெண் கேட்டுத்திரிந்தாள்.
குழந்தைகளையும் தன்னையும் நட்டாற்றில் விட்டுப்போனவனை உதறித்தள்ளித் துணிந்து வாழும் மனப்பலமில்லாது வீடு வீடாகத் திரியும் இப்பெண் ஒருபுறம்,
நன்கறிந்த ஒருவனே பொய்த்துப் போனபின்பும் அண்மையிலே அறிமுகமான, குடும்பஸ்தன் என நன்கறியப்பட்ட ஒருவனோடு வெளியேறி தன் தங்கிவாழ்தலுக்குத் துணை தேடிக்கொண்ட பெண் ஒருபுறம்,
பெண்ணெனப்படுபவளின் வாழ்க்கை திருமணத்தில் முடியவேண்டும், திருமண வாழ்க்கையிலும் ஆணே பற்றுக்கோலாக இருக்க வேண்டும், ஆணின்றி வாழ்க்கை இல்லை எனக் காலங்காலமாய் ஊறிப்போன உணர்வுகளுடன் அழுந்தி, அழிந்து கொண்டிருக்கும் பெண்களை வெளிக்கொணர்வது எப்படி?
அறிவும், அழகும் ஒருங்கே பெற்ற பெண் ஒரு சிறந்த ஆசிரியை, பல்கலைக்கழக அனுமதி பெற்றும் அவர் செல்லாததற்குக் காரணம் காதல். ஏற்கனவே திருமணமாகிய, பல பெண்களுடன் தொடர்புடையவன் என்று பலரால் கூறப்பட்ட ஒருவனைத் திருத்தி வாழவைப்பேன், வாழுவேன் என்ற நம்பிக்கையுடன் கோலாகலத் திருமணத்துடன் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
சில வாரங்களின் முன் தனது திருமணப்படங்களைக் காட்டிச் சென்ற அப்பெண் தற்கொலை செய்துகொண்டார் எனும் செய்தி என்னைத் திகைக்க வைத்தது.
பல வருடங்களாகக் காதலித்து இப்படிப்பட்டவன்தான் என்று அறியப்பட்ட ஒருவனைத் திருத்தி வாழலாம் என்ற நம்பிக்கையைக் கைவிட்டமை ஒருபுறமிருக்க, தகுதியற்ற ஒருவனைத் தன்வாழ்வின் மையமாகக் கொண்டு, அந்த மையம் திசை மாறியமைக்காகத் தற்கொலை செய்துகொண்ட அப்பெண்ணின் அறிவு எங்கே சென்றுவிட்டது?
திருமணமென்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதைவ}டவும் கல்வி, தொழில், இலட்சியங்கள் வாழ்க்கையாக அமையலாம் என்றும் அப்பெண்ணுக்கு அறிவூட்டத்தவறியது கல்விமுறைமையின் குற்றமா? சமூகத்தின் குற்றமா?
கல்வியறிவு, தொழில், பொருளாதாரம் அனைத்துமிருந்தும் வாழ்வதற்கான நம்பிக்கை இப்பெண்ணிற்கு ஏன் இல்லாமற் போனது? இளம் சந்ததியினரை வழிகாட்டும் தலையாய பணியைச் செய்யும் ஒரு ஆசிரியை தன் மாணவர்களுக்கு விட்டுச்சென்ற செய்தி அவர்களை எவ வாறு வழிநடத்தப் போகின்றது?
நாட்டின் குடிமகன் ஒருவனை உருவாக்குவதில் பெரும்பங்குவகிக்கும் ஆசிரியர்கள் இதையிட்டுச் சிந்தித்தால் என்ன?
Eingestellt von Chandravathanaa um 8/13/2003 02:23:00 PM 0 Kommentare
Labels: சிகரங்களைத் தொட்ட பின்னும்
விரு(ம்பி)ப்பூட்டும் விலங்குகள் -அர்த்தநாரி
பெண்ணிய சிந்தனைகள் முனைப்புப் பெற்று, ஆண் பலமிக்கவன், தனித்தியங்குபவன், துணிவுள்ளவன், புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுபவன், பாலியல் சுதந்திரம் உள்ளவன், அதேசமயம் பெண்ணோ வீட்டில் இருப்பவள், வெட்கம் உள்ளவள், பலவீனம் நிறைந்தவள், உணர்ச்சிவசப்படுபவள், தங்கிவாழ்பவள் என்ற ஆணாதிக்க சமூக அமைப்பின் வழி புனையப்பட்ட ஆண் பெண் அடையாளங்கள் தமது தனித்துவத்தை மெல்ல மெல்ல இழந்து பெண்ணின் பல்பரிமாண ஆற்றல்கள் பல திசைகளிலும் வேகமாக வெளித்தெரியும் ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம்.
உயிர்களின் உருவாக்கத்திற்கும் உறவுகளின் பிணைப்புக்கும் ஆதாரமாய் விளங்கும் பெண்கள் சமூகத்தின் இன்றைய பெரும் பிரயத்தனங்களில் ஒன்று ஆணாதிக்க சமூக அமைப்பு தன் மீது வலிந்து பிணைத்திருக்கும் அனைத்து விலங்குகளிலிருந்தும் விடுவித்துக் கொள்ளப்போராடுதல், மற்றையது அபிவிருத்தி நோக்கிய பாதையில் தனது பங்கைச் செலுத்துதல்.
பெண் தனக்குத்தானே விரும்பி அணிபவை, பெண்ணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் அணிவித்துவிடுபவை என ஆணாதிக்க சமூக அமைப்பால் பெண்ணைச் சுற்றியிருக்கும் விலங்குகள் அனைத்திலிருந்தும் விடுபட வேண்டிய அவசியம் பெண்ணுக்கு உண்டு. இவ விலங்குகளில் பல அறிவின் துணைகொண்டு சுலபமாக அகற்றப்படக்கூடியவை, சில அதிகப் பிரயத்தனத்துடன் அகற்றப்பட வேண்டியவை. இன்னும் சில கூட்டு முயற்சிகளினூடாக மட்டுமே அகற்றப்படக் கூடியவை. வேறும் சிலவோ அடித்து நொருக்கித்தான் அகற்றப்படக்கூடியவை. இதில் பெண்ணின் ஆளுமையை மிக மோசமாகச் சிதைக்கக்கூடிய வல்லமையுள்ள அதேசமயம் அறிவின் துணைகொண்டு மிகச் சுலபமாக அகற்றக்கூடிய ஒரு விலங்கு தொடர்பான ஒரு பொதுப்பார்வையை தர்க்கரீதியாக ஆராயும் முயற்சியே இக்கட்டுரையாகும்.
சாமத்தியச் சடங்கு
வளரிளம் பருவத்தில் இருக்கும் ஒரு சிறுமியின் ஆளுமையை மிக மோசமாகச் சிதறடிக்கும் ஆற்றல் மிக்க சடங்கு இது. பருவமடைதல், வயதுக்கு வருதல், பெரிசாதல், பக்குவப்படுதல், சாமத்தியப்படுதல் எனப் பேச்சுவழக்கிலும் பூப்புனித நீராட்டு விழா என எழுத்து வடிவிலும் அழைக்கப்படும் இச்சடங்கு, குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு மாறும் ஒரு இடைக்கட்டத் தொழிற்பாடுகள் குழந்தையின் உடற் தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான ஒரு மாற்றத்தை ஊரறியச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு சடங்காகும். 'பெண் கரு உற்பத்திக்கு தயாராகிவிட்டாள்' என்பதை ஊரறிய தம்பட்டம் அடிப்பதே இச்சடங்கு கொண்டாடூடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும். குடும்பத்தின் பொருளாதார வசதிக்கேற்ப சடங்கின் பரிமாணமும் கூடிக்குறையும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
துஸ்ட ஆவிகள் தீண்டாதிருக்கும் பொருட்டு குப்பை, விளக்குமாறு போன்றவற்றில் இருத்தி நீராட்டுதல், வேப்பிலை சுற்றுதல், கழிப்புக்கழித்தல் என்பனவும், இவள் என் மகனுக்குரியவள் என்ற உரிமையைத் தக்கவைக்கும் பொருட்டு தாய் மாமனுக்கு சடங்கில் முதல் முக்கியத்துவம் கொடுப்பதும், 'தீட்டு' சீலையை சலவைத் தொழிலாளியிடம் ஒப்படைப்பதன் மூலம் பெண் பருவமடைந்த செய்தியை ஊருக்கு உறுதிப்படுத்தும் பொருட்டு ஊர் முழுவதும் தொடர்பு பேணும் சலவைத் தொழிலாளிக்கு முக்கிய இடம் கொடுத்தல் என்பன காலம் காலமாக இச்சடங்கின் முக்கிய அம்சங்களாகப் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன.
பருவமடைந்த நாளிலிருந்து வீடு தவிர வேறு இடங்களுக்குப் போவதைத் தடுத்தல், பள்ளி வாழ்வைத் தடை செய்தல், கூடப்பிறந்த ஆண் சகோதரத்துடன் கூட நெருங்கி நின்று கதைப்பதைத் தடுத்தல் போன்ற இரு நூற்றாண்டுப் பழைமைகள் இன்றைய காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றும் என்று சுட்டிக்காட்டிப் பேசுமளவிற்கு அரிதான நிகழ்வுகளாகி விட்டன.
'அனைவரிற்கும் கல்வி' என்ற சுலோகம் அயலவனின், வகுப்புத் தோழனின் தொழில் செய்யும் இடங்களில் உள்ள சமூகத்தின் பண்பாட்டு அம்சங்களை அறிந்துகொள்ள 'உதவியது போல், பண்பாட்டுப் படையெடுப்புகளும், பத்திரிகை போன்ற பொதுசனத் தொடர்புச் சாதனங்களும் உலக வாழ் நிலையை அறிந்துகொள்ளவும் அதைப் பின்பற்றவும் தூண்டியமையானது வேப்பிலை சுற்றுதல், பருவமடைந்த தினத்திலிருந்து ஒரு மாதமோ அதற்கு கூடிய நாளோ வீட்டு மூலைக்குள் முடக்கிவைத்தல், இரும்புத்துண்டும் கையுமாய் திரிதல் போன்ற மூடப் பழக்கங்களை இல்லாமல் செய்துவிட்டது மட்டுமன்றி, பருவமடைதல் கடவுள் செயல் என்ற நம்பிக்கையையும் போக்கடித்துவிட்டது.
ஆனால், இன்று கண்முன்னே நடைபெறும் சில அலங்கோலங்களைப் பார்த்தால் மேற்கூறப்பட்ட மூடப் பழக்க வழக்கங்களே பரவாயில்லையோ என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அதிலும் ஒன்றரைத் தசாப்தங்களுக்கு முன்பு தமிழ் மண்ணில் நுழைந்த வீடியோ தொழில்நுட்பம் ஈழத்து அறிவுசார் வளர்ச்சிகளை உலகெங்கும் பரப்ப முயன்றதை விடவும் காரணகாரியத் தொடர்பற்ற, மனம் போன போக்கின்படி செய்யப்படுகின்ற, மூடநம்பிக்கைகளை விடவும் மோசமான புதிய புதிய சடங்குகள் புதிது புதிதாக மனித மூளையில் உதிக்கக் காரணமாக மாறியிருக்கிறது. சமூக விழிப்புணர்வு, அறிவூட்டல், பண்பாட்டுக்கலப்பு எது வந்தும் கூட மாற்றமடையாது பேய் பூதங்களில் நம்பிக்கை வைத்து உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படும் எத்தனையோ சடங்குகளை, ஆட்டங்காண வைத்து வெறும் சம்பிரதாயங்களாக மாற்றிய வல்லமை இந்த வீடியோ தொழில் நுட்பத்திற்கு உண்டு. இதன் வருகையுடன் சடங்குகளில் பழையன கழிதலும் புதியன புகுதலும் பரவலாக இடம்பெறத் தொடங்கியதுடன் இந்த கண்மூடித்தனமான புதிய சடங்குகள் பெரும்பாலும் படித்த, நடுத்தர வர்க்க குடும்பங்களிலேயே அதாவது மூடப்பழக்கங்களில் மூலத்தை அறிவுத்தேடலின், விழி கண்டறியும் வாய்ப்பும் அனைத்தும் டாம்பீக வாழ்வுக்குள் அமுங்கிப் போய்க்கிடக்கும் குடும்பங்களிலேயே அதிகம் கடைப்பிடிக்கப்படும் அவலத்திற்கு இட்டுச் சென்றிருக்கிறது.
புதுப்புது நுட்பங்கள்
ஆளுயரத்திற்கும் அரையடி மேலாவது வேலியடைத்துக் குளிக்கும் பண்பாடு, நெருங்கிய உறவுகளுடன் மட்டுமே பால் அறுகுவைத்து நீராட்டும் பண்பாடு ஊர் முழுடூவதையும் கூட்டி ஊர்ப் பொதுக் கிணற்றுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று நீராட்டும் நிகழ்வாக மாறியிருக்கிறது. கன்னிப் பெண்கள் தவிர்க்கப்பட்டு வயது வந்தபெரியவர்கள் மட்டுமே அதிகம் கலந்துகொள்ளும் நிகழ்வு, விதவிதமான நிறங்களில் நீர் நிறைத்து, ஒற்றை விழ ஒன்பதோ, பதினொன்றோ அதற்கும் மேலோ செம்பெடுத்துச் சென்று பிள்ளையின் தலையில் நீர் ஊற்றுதல், குத்துவிளக்கு எடுத்தல் பூப்போடுதல் என்று சிறுமியரையும், இளம்பெண்களையும் களத்தில் இறக்கியிருக்கிறது. இதில் அவலம் என்னவென்றால் ஒரேவித ஆடை அலங்காரங்கள் முக்கியம் பெறுவதால், ஏழைப்பெற்றோருக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் மனமகிழ்வுக்கு உரிய ஒரு நிகழ்வு தேவையற்ற மன உளைச்சலையும், சங்கடங்களையும், வரவுக்கு மீறிய செலவையும் ஏற்படுத்துவதுதான்.
தொட்டிக்குள் நீர் நிரப்பிப் பூக்கள் போட்டுப் பிள்ளை நீராடுவது போல் படம்பிடிக்கும் நிகழ்வு கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக நடுத்தர வர்க்கக் குடும்பங்களிடையே பின்பற்றப்படும் புதிய தொழில்நுட்பம், தொட்டி வாய்ப்புகள் மிகவும் குறைந்த வன்னி மண்ணில் இடப்பெயர்வால், ஏற்பட்ட வாழ்நிலைச் சூழலுக்கு ஏற்ற புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை தோற்றுவிக்க, இப்போது நிலத்தில் கிடங்குவெட்டி மண் கரையாமல் அதன் மேல் தரப்பாள் (வுநுNவு) போட்டு அதற்குள் நீர் நிறைத்துப் பூக்கள் நிரப்பி நீராட்டு விழா நடத்துவது புதியதோர் பாணியாக மாறியிருக்கிறது.
பிள்ளையை நன்கு அலங்கரித்து மணவறை கட்டி வீட்டுச் சடங்குகளை முடித்தபின்னர் கோயில் கும்பிடுவதற்கு, பிரதான பாதையால் ஊர்வலமாக மேளதாளங்களுடன் அழைத்துச் செல்லுதல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றத் தொடங்கியிருக்கின்றன.
வெளிநாட்டுக்கு அனுப்பி திருமணம் செய்துவைக்க வேண்டி வந்தால், பிள்ளையை அலங்கரித்து ஆசை தீரப்பார்க்க முடியாமல் போய்விடுமாம் என்று தான் இப்படியெல்லாம் செய்கின்றோம் என்று செய்யும் செயல் எல்லாவற்றிற்கும் ஒரு சப்பைக்கட்டு கட்டிவிடுவது பொதுவாகிவிட்டது.
ஒன்றையொன்று வெல்லும் கேலித்தனங்கள்
'உன்னை விரும்புகிறேன்' என்று கடிதம் போட்டாலோ, நேரில் கேட்டாலோ உள்ளத் தெளிவுடன் பதில் சொல்வதை விட்டுவிட்டு கத்திபொல்லுடன் கிளம்பிவிடும் இரத்த உறவுகள், 'என் பிள்ளை கருத்தரிக்கும் தகுதி பெற்றுவிட்டாள்' என்று மேளதாளங்களுடன் ஊர்கூட்டிப் பறைசாற்ற எப்படிச் சம்மதிக்கின்றனர்?
வாகனங்களில் பயணிக்கும் போதோ, பொது இடங்களிலோ தவறுதலாக கை கால் பட்டுவிட்டால், முறைத்துப் பார்த்துச் சில சமயம் செருப்புக் கழற்றும் அளவுக்கே கோபப்படும் நாம் வெட்க உணர்வு எதுவுமின்றி பலர் முன்னிலையில் குளியல் காட்சிக்குத் தயாராக எப்படிச் சம்மதிக்கின்றோம்?
மாதக்கணக்கில் வீட்டு மூலைக்குள் முடக்கி, காலை மாலை என்று முட்டை, நல்லெண்ணெய், உழுத்தங்களி, சரக்கரைப்பு என்று ஊட்டமுள்ள உணவுகளின் அளவுக்கதிகமான திணிப்புக்கு எதிராக முரண்டு பிடித்து முற்றாக ஒழித்த எமக்கு, கழிப்புக்கழிக்கும் வரை இரும்புத் துண்டும், வேப்பிலையுமாய்த் திரிவதை இல்லா தொழித்து இரண்டு கிழமைக்கு முன்தாகவே பாடசலை, ரியூசன் என்று பறந்தோடும் வல்லமைபெற்ற எமக்கு 'நான் கருத்தரிக்கத் தயார்' என ஊர்கூட்டிப் பறைசாற்றும் இந்த அசிங்க நிகழ்வை மட்டும் ஏன் இல்லாமல் செய்ய முடியவில்லை? அதிலும் பொருளாதார வசதி குறைந்த பெற்றோரைப் பிடிவாதம் பிடித்தோ அல்லது பயமுறுத்தியோ வகுப்புத் தோழிக்கு எப்படி எப்படியெல்லாம் கொண்டாடினார்களோ அதேபோல் எனக்கும் செய் என்று நிர்ப்பந்திக்கும் அளவுக்கு நாம் வந்தது ஏன்..?
வேப்பிலை சுற்றுவதையும் இரும்புத்துண்டும் கையுமாய் திரிவதையும் மூடத்தனம் என்று உணர்ந்து கைவிடும் அளவுக்குச் சமூக விழிப்புணர்வு பெற்ற, படித்த பெற்றோர், அதைவிடவும் மோசமாக 'பருவமடைதல் என்பது ஒரு பெண்ணின் உடற்தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான மாற்றம்' என்பதைத் தெளிவாக விளங்கிக்கொண்ட பின்பும்கூட இத்தகைய காரியங்களில் கவனம் செலுத்துவது எப்படி?
தலைமுறை இடைவெளி
மனித வாழ்க்கைக் காலத்தில் அன்றிலிருந்து இன்றுவரை தலைமுறைகளுக் கிடையிலான இடைவெளி நீண்டதாகவும் சிக்கல் வாய்ந்ததாகவுமே இருந்திருக்கின்றது. எனினும் அறிவியல் தொழில்நுட்ப வழி உருவான தொடர்புச் சாதனப்பயன்பாடும், பண்பாட்டுக் கலப்புகளும் இந்த முரண்பாட்டை ஒரு சில தசாப்தங்களாக மிகவும் சிக்கலாக்கியிருக்கிறது. மனித நடத்தைக் கோலங்களோ, வாழ்க்கைப் பாணியோ, சமூகப் பழக்க வழக்கங்களோ துரித மாற்றத்திற்கு உட்படும் அளவுக்கு தனிநபர் அனுபவங்களை குறிப்பாகப் பெற்றோரின் வாழ்வியல் அனுபவங்கள் - நடைமுறை வாழ்வுக்கான வழிகாட்டியாக ஏற்றக்கொள்ளும் மனப்பாங்கு உலகளாவிய hPதியில் மிகவும் குறைவாகவே உள்ளது. எந்தவொரு சமூகத்திலும் அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களின் வேகத்திற்கும் தலைமுறை இடைவெளியின் அளவுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்புண்டு. அதாவது இறுக்கமான பண்பாட்டு விதிகளைக்கொண்ட நம்மைப்போன்ற கீழைத்தேய சமூகங்களில் தனிநபர் ஒருவரின் சமூகப்பங்களிப்பு தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதனால் வாழ்க்கைமுறை தலைமுறைக்குத் தலைமுறை எவ வித சிக்கலுமின்றி கடத்தப்படுவதால் தலைமுறை இடைவெளி குறைவு என்றும் நவீன சமூகங்களில் தனிநபர் ஒருவருக்குப் பல தெரிவுகள் இருப்பதால் அங்கு அதிகம் என்றும் மானுடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எமக்கு முந்திய தலைமுறையில் பருவம் அடைந்த காலப்பகுதியிலிருந்தே சிறியவர் பெரியவர், ஆகிவிடுவார் குறிப்பாக பெண் பிள்ளைகள் திருமணம் செய்து தாய்மைப்பருவத்தை 20 வயதுக்குள்ளேயே பெரும்பாலும் அடைந்துவிடுவர். ஆண் குழந்தைகள் தோட்டங்களில், தொழிற்சாலைகளில், வீடுகளில் மேலதிகப் பொறுப்பை எடுத்துவிடுவர். ஆனால் இன்று அப்படியல்ல.
இரண்டும் கெட்டான் பருவம்
நவீன கைத்தொழில் சமூகம் ஒன்றின் உருவாக்கத்துடன் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள் இவர்களின் பொறுப்புக்களைச் சற்று பின் தள்ளிப் போட, சிறியவராகவும், இல்லாமல் பெரியவராகவும் மாறாமல் இருக்கும் 12-18 க்கு இடைப்பட்ட இரண்டும் கெட்டான் பருவமானது வளரிளம் பருவம் (ADOLESENCE) என 1904இல் G.STANLEY HALL என்பவரால் அடையாளப்படுத்தப்பட்டு இன்று தனிக்கவனம் எடுக்கப்படவேண்டிய ஒரு பிள்ளைப் பராயமாக்க கருதப்படுகிறது.
மனித வாழ்வின் ஏனைய பருவங்களைவிடவும் அதிக கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு பருவமாக வாழ்க்கைப் போக்கையே திசைதிருப்பக்கூடிய அபாயங்கள் நிறைந்த ஒரு பருவமாக வளரிளம் பருவம் கருதப்படுகிறது. சூழலில் காணப்படும் பொருட்களைத் தோண்டித் துருவி ஆயிரம் கேள்விகள் கேட்டு விடை கூறமுடியாமல் பெரியோரைச் சங்கடப்படுத்தும் குழந்தைப்பருவத்தில் இருந்து 'நான் யார்? எனக்கும் என் குடும்பத்திற்கும், எனக்கும் என் பாடசாலைக்கும், எனக்கும் என் சமூகத்திறக்கும் தொடர்பு என்ன?' என்று தன்னைத் தானே தோண்டித் துருவும் நிலைக்கு மாறும் ஒரு பருவம் இது. தான் யார் என்ற குழந்தையின் சிந்தனையும், குழந்தை யார் என்ற பெற்றோரின் சிந்தனையும், தன்னை அளப்பதற்கு குழந்தை தெரிவு செய்யும் இலட்சிய நபரும் இணைந்த ஒரு கலவையே வளரிளம்பருவ சிறுவனோ, சிறுமியோ ஆகும். மிகவும் குறுகிய ஒருகாலப் பகுதிக்குள் தன் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் (மார்பகவளர்ச்சி, ஆண்களின் உயர அளவின் வேகம், முடி வளர்தல்) தன் உடல் தொழிற்பாட்டில் ஏற்படும் மாற்றம் (மாதவிடாய் வட்டம் தொடங்குதலும், ஆணுக்கு விந்து வெளியேறுதலும்) தன் உளப் போக்கில் ஏற்படும் மாற்றம் என்பவற்றறுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை இப்பருவத்திற்கு உண்டு.
மிகவும் அபாயம் நிறைந்த இப்பருவத்தில் ஆளுமையையே சிதறடிக்கும் இந்தச் சாமத்தியச் சடங்கு ஆக்கபூர்வமான சமூகப்பிரசைகளை உருவாக்கிக் கொடுப்ப தற்கு பதில் ஆளுமை சிதைந்த, அடிமைத்தன வாழ்வுக்கே பெண்ணினத்தை மீண்டும் வழி நடத்திச் செல்லும்.
எங்கே நிற்கின்றோம்.?
வாங்கப்படவும் விற்கப்படவும் கூடிய ஒரு பொருள்தான் பெண். பிள்ளை பெறும் பிரதான கருவியான இப்பொருள் கருவளம் அடைந்துவிட்டது என்பதை ஊரறியச் செய்யவேண்டிய தேவையும், இப்பொருளை எவ வித தீங்கும் வராமல் பாதுகாக்கும் வகையில் சடங்குகள் செய்வதும் அறியாமை மிகுந்த எமது மூத்த தலைமுறைக்கு அவசியமானதாக இருந்திருக்கக்கூடும். அதேபோன்று வெளியுலகம் தெரியாது, அறிவூட்டல் வாய்ப்புக்கள் அற்று சமையலறைக்குள் முடங்கிக் கிடக்கும் பெண்ணுக்கு பருவமடைதலும் அதன் வழி திருமணத்திற்குத் தயாராதலும் மகிழ்வூட்டக் கூடியதொன்றாகவும் இருந்திருக்கக்கூடும்.
ஆனால், இன்று அப்படியல்ல, அறியாமை இருளில் மூழ்கிக்கொண்டே எம்மை வழிநடத்திச் சென்ற எம் முன்னோரின் தடங்களைப் பின்பற்றிச் சென்ற காலகட்டத்திலிருந்து மெல்ல மெல்ல மாறி அறிவின் வாசல் அனைவரிற்கும் திறந்து விடப்பட்டிருக்கும் காலத்தில் நாம் நுழைந்து நீண்ட காலமாகிவிட்டது. எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் உலக நடப்பைப் பக்கத்து வீட்டு வானொலி, தொலைக்காட்சி வழியாகவோ அல்லது சந்திக்குச்சந்தி நடக்கும் சங்கதி அலசல் மூல மோ பார்க்கின்றோம், கேட்கிறோம். தாம் நேரே பார்த்து அறியாத பொருட்களில் அதீத நம்பிக்கை வைத்து அதையே கண்மூடித்தனமாகப் பின்பற்றும் மூடத்தன வாழ்க்கையில் இருந்து தர்க்க hPதியாக காரண காரியத் தொடர்பை கண்டறிந்து அதன் வழி நடக்கத் தொடங்கிய வாழ்நிலைக்கு நாம் நுழைந்து நூற்றாண்டுகள் இரண்டைக் கடந்த பின்பும் புதுப்புது மூடத்தனத்திற்கு ஆளாவதை பார்க்கும்போது இன்று வளர்ந்துவிட்ட அறிவியல், மூடப் பழக்கவழக்கங்களை களைவதற்குப் பதிலாக மூடப் பழக்கத்தை மேலும் நவீன வடிவில் வெளிக்கொணர்வதற்கு உதவியிருக்கிறதல்லவா? அல்லது பயன்படுத்தப்பட்டிருக்
கிறதல்லவா?
காட்டுமிராண்டிக்கால கட்டத்திலிருந்து இன்றைய அதி உச்சகட்ட நாகரீக வளர்ச்சிவரை எத்தனையோ இடர்பாடுகளை, வளர்ச்சிக்கட்டங்களை சந்தித்திருக்கின்ற மனித கமூகத்தின் சிந்தனை, வாழ்வைப் பண்படுத்தும் அம்சத்தில் ஏறுநிலையிலும் மனதைப் பண்படுத்தும் அம்சத்தில் இறங்கு நிலை நோக்கியும் நகர்ந்திருக்கின்றமையே வரலாறு தெளிவாக எடுத்துக்காட்டுவதுடன் பொதுநலத்தை மையப்படுத்திய வாழ்நிலை சுயநல நோக்குகளுக்குத்தாவிய காலம் முதற்கொண்டே மனப்பண்பாடு தேய்மானம் அடையத் தொடங்கிவிட்டது. சிறந்த திட்டமிடல், முகாமைத்துவம், நுண்ணறிவு என்பன நினைத்துப்பார்க்கமுடியாத மனித சாதனைகளுக்கு அடித்தளமிடும் அதேசமயம் மனதைப் பண்
படுத்தும் முயற்சியைக் 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' என்ற வாசகம் ஆக்கிரமித்துவிட்டது.
புதுப்புது மூடத்தனங்களை உருவாக்கும் இத்தகைய ஆபத்தான நிலை அபிவிருத்தி நோக்
கிய பாதையில் ஏற்கனவே நுழைந்துவிட்ட, நுழைந்து கொண்டிருக்கின்ற ஒரு சமூகத்தை மீண்டும் அடிமைத்தன சமூக அமைப்புக்குள் நிச்சயம் குப்புறத்தள்ளி விழுத்தும். இத்தகைய ஆபத்திலிருந்து சமூகத்தைக் காப்பாற்றும் ஒரு சமூகப் பொறுப்புணர்வை அறிவூட்டல் வாய்ப்பும், பொருளாதார வாய்ப்பும் ஒருங்கிணைந்த பெண்கள் சமூகமாவது சுமக்க இனியாவது முன்வருமா?
Eingestellt von Chandravathanaa um 8/13/2003 09:51:00 AM 0 Kommentare
Labels: விரு(ம்பி)ப்பூட்டும் விலங்குகள்
நல்லதொரு தலைவி நாட்டின் வழிகாட்டி-தென்றல்
குடும்பமே தலைமைத்துவத்தின் தோற்றுவாய்
என்ன! தலைவி, தலைமைத்துவம் என்ற சொற்களைப் பார்த்ததுமே பயந்துவிட்டீர்களா? அல்லது, இதற்கும் எங்களுக்கும் எட்டாப் பொருத்தமென்று எட்டிநடை போடுகிறீர்களா?
பரவாயில்லை, மீன்களைப் போன்று துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடும் உங்கள் விழிகளை சற்றே இப்பக்கத்தில் ஓடவிடுங்கள்.
ஆமாம். அவசரமில்லாது வாசித்து மகிழ்ந்த சிறுகதையோடு சேர்த்து இதனையும் வாசித்துப் பாருங்களேன். உங்களுக்குள்ளே உங்களையறியாமலே ஒளிந்துகொண்டிருந்த, இல்லை இல்லை ஒளிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு 'குட்டித்தலைவி' மெல்ல எட்டிப் பார்த்துச் சிரிப்பாள். ஏது அதிகம் யோசிக்கிறீர்கள் போலிருக்கிறது? சரி, விடயத்துக்கே வருவோம், உங்களை அதிகம் குழப்பாது, நீங்கள் எல்லோரும் உங்கள் குடும்பத்திலே சில விடயங்கள் தொடர்பாகத் தீர்மானங்கள் எடுக்கின்ற பழக்கமுடையவர்கள் தானே? உங்கள் கணவருடனோ அல்லது தந்தை, சகோதரனுடனோ சரிசமனாக நின்று வாதிட டு வெல்லக்கூடிய உரிமைகொண்ட அதிஸ்டசாலிப் பெண்ணாக நீங்கள் சிலவேளைகளில் இல்லாதிருக்கலாம். ஆனாலும் ஒரு 'தீர்மானம்' (DICISION)) என்ற விடயம் குடும்பத்தில் எழுமிடத்து உங்களையும் ஒரு கருத்துக்கேட்பார்கள்தானே? இங்கேதான் பெண்களாகிய நீங்கள் உங்களது அசாத்திய ஆற்றலை வெளிப்படுத்தும் இடம் உருவாகிறது. அதுதான் 'தீர்மானம் எடுத்தல்' (DICISION MAKING) என்ற ஒரு பெரும் ஆற்றல்.
குடும்பத்தின் தலைவியின் தலைமைத்துவம்
உங்களது செல்லக் குழந்தைகள் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, படிக்கும் படிப்பு, அவர்கள் செய்யும் குறும்பு, அவர்களின் முன்னேற்றம், ஆளுமை என்று எத்தனை எத்தனையோ, விடயங்களில் எடுக்கவேண்டிய தீர்மானங்களிற்கு தாயாகிய நீங்களும் ஒரு முக்கிய காரணியாகின்றீர்கள். இவற்றிலும் இவர்களின் ஆரம்ப கட்ட வளர்ச்சிப் படிநிலைகளில் நீங்கள் மட்டுமே தனித்து நின்று முடிவெடுக்கவேண்டி நேர்ந்த சூழ்நிலைகள் பல உங்கள் முன் உருவாயிருக்கும். இதைவிடவும், எத்தனையோ அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் உடனுக்குடன் தீர்மானங்கள் மேற்கொண்டு முடிவுகள் எடுக்கவேண்டிய நெருக்கடிக்கு பெண்களே அகப்படுகிறார்கள் என்பது யதார்த்த ரீதியிலான உண்மை.
ஆனாலும், நீங்கள் எடுக்கும் தீர்மானங்களையோ, முடிவுகளையோ பற்றிக் குறையாகப் பேசினாலும் பாராட்டிப் பேச ஒருவரும் முன்வந்திராததை நீங்களே இந் நேரம் வரைக்கும் உணர்ந்தீர்களோ என்பது யாருக்கும் தெரிந்திராது. அதை உணரத் தலைப்படாதது உங்களது குற்றம் என்று எவரும் கூறவும் முடியாது. ஏனெனில் சமுதாயம் இன்னும் பெண்களை நல்ல தலைவிகளாக ஏற்றுக்கொள்ளாமைக்கு நாங்களே காரணகர்த்தாவாகி விட்டமை எமது துரதிஸ்டமே.
தோழிகளே! எந்தச் சின்ன விடயமாக இருப்பினும், அது உங்கள் மகள் படிக்கும் புத்தகங்களாகட்டும், மகள் அணியும் உடைகளாகட்டும், சரியாக நீங்கள் எடுக்கும் தீர்மானங்களே உங்கள் குழந்தைகளைச் செதுக்குகின்றன. இந்த நுட்பமான உண்மையைப் புரிந்துகொண்டு செயலாற்றத் தொடங்குவீர்களேயானால் ஒரு குடும்பத்தை மட்டுமல்ல ஒரு நாட்டையே கட்டி ஆளக்கூடிய வல்லமை பொருந்தியவர்களாக நீங்கள் மாறுவீர்கள் என்பதை ஆணித்தரமாகக் கூறலாம். குடும்பச் சக்கரத்தின் அச்சாணியாக விளங்கும் குடும்பத் தலைவிகளே! உங்களுள்ளே புதையுண்டு மறைந்து போயிருக்கும் எத்தனையோ ஆற்றல்களை இனியும் மூடிமறைத்துக் கொண்டிருக்க முனையாதீர்கள். காத்திரமான கருத்தாழமுள்ள இந்தச் சொல் குறித்து நிற்பது வெறுமனே ஒரு பெண்ணை மட்டுமல்ல, ஒரு உண்மையான சேவகியை, விசுவாசியை ஆத்மார்த்தமாக நேசிப்பவளை இதனிலும் பார்க்கத் துல்லியமாகத் தீர்மானங்கள் எடுப்பவளை, நல்லதொரு வழிகாட்டியை.
இவள் கொண்டிருக்கும் இத்தகைமைகள் எமது கண்களுக்குச் சாதாரணமாகத் தென்படினும் அவற்றின் வெளிப்பாடுகள் அவளைச் சார்ந்தோரில், அவளின் வழிகாட்டலைப் பின்பற்றுவோரில் மிளிருவதை நாம் காணலாம்.
இதுதான் நாம் 'தலைமைத்துவம்' என்று பெரிதும் மதிக்கும் தகைமை. உண்மையில் இந்தப் பதத்தை நீங்கள் ஒரு நிர்வாகியுடன் தான் சாதாரணமாக ஒப்பிட்டுப் பார்க்கக்கூடும். ஆனாலும் நிர்வாகி என்பவர் திட்டவட்டமாக சமயோசிதமான முறையில் தீர்மானங்கள் எடுப்பவர், ஆகவே நீங்களும் ஒரு திறமையான நிர்வாகியே என்று கூறுவதை யாரும் மறுக்கவியலாது.
தலைமைத்துவத்தை வளர்க்க வேண்டியது பெண்களின் தார்மீக பொறுப்பு
என்ன சகோதரிகளே! ஏதோ பெரிய பெரிய வார்த்தைகள் பற்றிக் கதைக்கின்றேனே எனப் பதட்டப்படுகிறீர்களா? அதிகம் பயப்படாமல் நான் சொல்லும் வழிமுறைகளைப் பின் பற்றப் பாருங்களேன், சரி ஒரு குடும்பத் தலைவி சிறந்த நிர்வாகி என்பதை ஏற்றுக்கொண்டாலும் நான் வேலைத் தளத்திற்கும் சென்று வீட்டுப் பணியும் செய்வதால் இரட்டைச் சுமைதான் ஏற்படுகிறது. சரியான தீர்மானங்கள் எடுக்க அவகாசமே இருப்பதில்லை எனக் கவலை அடைகிறீர்களா? அந்தக் கவலையே வேண்டாம், உங்களுக்கு முன்னே குவிந்து கிடக்கும் வேலைகளை முதலில் வகைப்படுத்துங்கள். முதலில் செய்து முடிக்கவேண்டியவற்றையும் காலதாமதமாகச் செய்து முடிக்கக் கூடியவற்றையும் பட்டியலிடுங்கள். அதற்கேற்ப உள்ள நேரத்தை ஒதுக்குங்கள், உசாராக நிற்பீர்கள் என்றால் வேலைகள் எதுவுமே தேங்கிக்கிடக்காது. ஆனால் ஒன்று வீட்டுப் பணி என்பது வீட்டிலுள்ள அனைவரும் செய்ய வேண்டியது, அதை முழுக்க உங்கள் தலையிலே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யச் சொல்லி யாரும் உங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லையே. ஆகவே தங்கள் கடமைகளைச் செய்ய உங்கள் பிள்ளைகளுக்கு மட்டும் பழக்குவதோடு நின்றுவிடாது முக்கியமாக உங்கள் கணவரைப் பழக்குங்கள். சில நாட்களில் உங்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த ஒற்றைத் தலைவலி தானாகப் பறந்துவிடும். உடலும் உள்ளமும் தானாகவே ஆறுதல் அடையும். வேலைத் தளத்தில் மட்டும் என்ன சளைக்கவா செய்வீர்கள். மனதிலே பாரமற்றிருந்தால் செய்யும் பணியைச் செவ வனே செய்யலாம். சரியானவற்றை சரியான விதத்தில் எடுத்துக் கூறலாம். நான்கு சுவருக்குள் மட்டுமல்லாமல் நான்குபேர் கூடும் இடத்தில் பணியாற்றக் கிடைத்திருக்கும் வாய்ப்பு அருமையானதல்லவா. தளர்ந்து போகாது கூச்சத்தை விட்டுத்தள்ளி செயலாற்றுங்கள். நன்கு யோசித்து தீர்மானங்கள் மேற்கொள்ளுங்கள், துணிவோடு அச்சம் ஏதுமில்லாமல் சரியாகப்பட்ட உங்கள் கருத்தை முன்வையுங்கள், அதன்படி செயற்படுங்கள். அவ வாறு நடப்பீர்களேயானால் வெற்றித்தேவதை உங்கள் காலடியில்.
நாங்கள் வீட்டில்தானே இருக்கிறோம். வேலைக்கு என்று வெளியே போவதுமில்லை.. வருவதுமில்லை என்று பொருமுகிறீர்களா? சற்றே உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள் முதலில் குடும்பமே கதி என்று கிடக்கும் உங்கள் போக்கை மாற்றிக்கொள்ள மனதில் உறுதி எடுங்கள். உங்களுக்குச் சமைப்பது மட்டும் தான் வேலை என்றாலும், சமையலறையிலேயே குமைந்து கிடக்கும் போக்கை மாற்றுங்கள். சமையலோடு சேர்த்து வேறு ஆக்கபூர்வமான அல்லாதுவிடின் பொழுது போக்கான சில காரியங்களைச் செய்ய முனையுங்கள். தோட்டம் செய்வது, பூமரம் வளர்ப்பது, தைப்பது, இல்லாதுபோனால் நாவல் வாசிப்பது என்று சில மனதுக்கு இனிமையான செயற்பாடுகளிலும் ஈடுபட முனையுங்கள். உங்களையறியாமலே நீங்கள் நல்லதொரு ரசிகையாக மாறுவீர்கள். மாலை நேரங்களில் தாராளமாகவே ஓய்வு கிடைக்க, வெளியே சென்றுவர நாலு பேரின் அறிமுகம் கிடைக்கும் கற்பனைகளும் சிறகு விரிக்க கைகளும் கதை, கவிதை என்று வடித்திடத் துடிக்கும். பிறகென்ன நீங்கள் எழுதியவற்றை முதலில் சிலர் வாசிக்க பின் அதனைப் பலர் ரசிக்க. இவ வாறே ஒரு பிரபல்யமாகி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தலைமையேற்று கடைசியில் ஒரு பேச்சாளராகவும் மாறி அசத்தி விடுவீர்கள்.
இது என்ன ஒரு ஐந்து வரியில் பேச்சாளர் ஒருவர் உருவாகிவிட்டார் என்று நகைக்கிறீர்களா? ஏன் நடக்காது? வேண்டுமானால் இந்த ஐந்து வரிகளும் ஈடேறும் காலப்பகுதி வேறுபடலாம். ஆனால் ஈடேறுவது நிச்சயமே. ஒருவேளை மேடைகளில் ஏறி கைகளை அசைத்து ஆக்கிரோஸமாக கதைக்கப் பிடிக்காவிட்டாலும், அவ வாறு கதைப்பவர்களின் பேச்சையாவது கேட்கும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளலாம் அல்லவா?
ஒரு மேடைப் பேச்சாளனைக் காட்டிலும் அப்பேச்சை ரசிக்கத் தெரிந்தவனே சிறந்த இலக்கிய கர்த்தா என்று அறிஞர் கூறுவர்.
உண்மையில் சகோதரிகளே! ஒரு சிறந்த தலைமை கொண்டுள்ள பண்புகள் பெண்களிடத்தேதான் அதிகம் குடிகொண்டுள்ளன என்று நான் கூறினால் நம்புவீர்களா? ஆனால், இது நூறுவீதம் உண்மை.
பலம், விடாமுயற்சி, வயப்படும் தன்மை என்ற ஒரு தலைமைக்குரிய மூன்று முக்கிய பண்புகளும் எதிர்ப்பாலரைக் காட்டிலும் உங்களிடம்தான் ஓங்கியிருக்கின்றன. இதை ஆங்கிலத்தில் மூன்றுக்கள் என்று குறிப்பிடுகிறார்கள். (POWER PERSEVERANCE PASSION) மேலும் இவ வாறு கூறுகிறார்கள். பெண்கள் இயல்பிலேயே பொறுத்துப்போகும் தன்மையும், வெளிப்படையான போக்கும் கொண்டிருப்பதோடு சிறந்த உறவாளராகவும் (COMMUNICATOR) விளங்குகிறார்கள். இதனால் தம் கீழுள்ளவர்களைச் சிறப்பாக உருவாக்குவதுடன் தகவல்களையும் இலகுவாகப் பரிமாறிக்கொள்கிறார்கள். கட்டளையிடுவதுடன் மட்டும் நின்றுவிடாது அவர்களே முன்நின்று காரியமாற்றுகிறார்கள். இதன் காரணமாக இவர்கள் தலைமையில் குற்றங்கள், குறைகள் கண்டுபிடிக்க முனைவது கடினமான காரியம் என மேற்குலக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
ஏது, ஆச்சரியப்படுமாப்போல் தெரிகிறதே? உண்மைதான் தோழிகளே! இப்பண்புகளை உங்களுக்காக மட்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றில்லை. நீங்கள் பெற்றுவளர்த்து ஆளாக்கும் குழந்தைகள் அதாவது எதிர்காலத்தில் உங்களை, இந்த நாட்டைக் காப்பாற்றப் போகும் அந்தக் குழந்தைகள் நாளைய சமுதாயத்தில் நற் பிரஜைகளாக தலை நிமிர்ந்து நடக்க, மற்றவர்களை வழிநடத்த இந்தச் சீரிய பண்புகளை அவர்களிடத்தே தழைக்கச் செய்வது உங்களது பொறுப்பல்லவா? இத்தகைய பாரிய பொறுப்பேற்றிருக்கும் நீங்கள் மட்டும் சோர்ந்து துவண்டு வாழலாமா? உங்களுக்குள்ளே கவனிப்பாரற்றுப் புதையுண்டு போய்க்கிடக்கும் இந்தப் பட்டை தீட்டாத இரத்தினங்களைச் சற்று சிரமம் எடுத்து மெருகேற்றிக்கொள்ளுங்கள். இந்தத் தளிர்கள் நாளை வளர்ந்து பெருவிருட்சமாகிக் காய்த்துக் கனிதந்து நற்பயனளிக்க அதனை தாங்கி நிற்கும் கொழுகொம்புகள் வைரமாக இருக்கவேண்டாமா?
உங்களுக்காக மட்டும் நாம் இதனைக் கேட்கவில்லை. இந்த நாட்டின் எதிர்காலத்தைச் செதுக்கப் போகும் சிற்பிகளுக்காக யாசிக்கின்றோம்.
எங்கே உங்களுடைய குட்டித் தலைவி குட்டிக் கட்டளைகள் இட ஆரம்பித்துவிட்டாள் போலிருக்கிறதே?
Eingestellt von Chandravathanaa um 8/13/2003 09:12:00 AM 0 Kommentare