Sonntag, August 10, 2003

மேற்குலகப் பெண்ணியம் தோல்வி கண்டுள்ளதா?

பல ஆயிரம் வருடங்களாக, பெண்கள் பலவீனம் உடையவர்கள் என்ற ஐதீகம் எங்கும் பரப்பப்பட்டு அந்தத் தன்மையிலேயே அதனை பெண்கள்கூட நம்பிவந்தனர். இந்த ஐதீகமே ஆணாதிக்க சமுதாயத்தின் எழுச்சிக்கு அடிப்படை, பெண்களின் அடிமைத்தனத்திற்கு அடிப்படை. 'ஆண்களின் பாலியல் இச்சையைத் தீர்க்க மட்டுமே பெண்கள் பிறந்தவர்கள்' என்று, அவர்களை பகிரங்கமாக காமப் பொருட்களாக மாற்றும் காட்டுமிராண்டித் தனத்திற்கு அடிப்படை.

இந்த ஆண் ஆதிக்கத்தின் அத்திவாரத்தையே நிலைகுலையச் செய்யும் பலத்த அடியைக் கொடுக்க தமிழீழப் பெண்கள் முன்வந்துள்ளார்கள். இந்த அடி, உலகின் அடக்குமுறைச் சக்திகளுக்கூடாக தனது அதிர்வலைகளைச் செலுத்தி உள்ள அதேநேரம், பெண்கள் இயல்பிலேயே பலவீனமானவர்கள் என்ற ஐதீகத்தில் இருந்து அவர்களது அடக்குமுறையாளர்களை விடுவித்துள்ளது.


விடுதலைப் போராட்டத்தில் தமிழீழப் பெண்கள்.
தமிழீழப் பெண்கள் எட்டியுள்ள சாதனையானது மனித வரலாற்றிலேயே அடையப்பட்டுள்ள மிக முக்கிய சாதனையாகும். தமிழீழப் பெண்கள் போர்க்களத்தில் சிங்கள ஆண்களுக்கு முகம்கொடுத்து அவர்களைக் கொன்றுகுவிப்பதோடு அல்லாமல் (சிங்கள) ஆண்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை, தனித்து நின்று எதிர்கொள்கின்றார்கள். தங்களது சொந்த யுத்த தந்திரோபாயங்களைப் பிரயோகிக்கின்றார்கள். தங்களது சுயபலத்தைக்கொண்டு எதிர்த்து நிற்கின்றார்கள். வல்லரசுப் படைகளினால் பயிற்சி அளிக்கப்பெற்ற பலமான ஒரு ஆண் இராணுவத்தை எதிர்த்தவர்கள் இவர்கள். அதிகளவு சுடுதிறன் வழங்கும் ஆயுதங்கள் மற்றும் பீரங்கிப்படகுகள் போன்ற பெரும்படைப்பலங்களை தமது எதிரி கொண்டுள்ளபோதும் வெறும் இலகு இயந்திரத் துப்பாக்கிகளையும் மோட்டார் எறிகணைகளையும் குறுந்தூர டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் கொண்டே இப் பெண்போராளிகள் எதிரியுடன் களமாடுகின்றனர். அதிலும் முக்கியமானது அவர்கள் தற்போது 'பெண்கள் படையணியாக' தனித்து நின்று வெற்றிகளைப் பெற்றுச் சாதனை படைக்கின்றமையாகும்.

இது ஏன் முக்கியமானது? ஆண்களோடு யுத்தம் புரிந்து பெண்களால் வெல்லமுடியும் என்பதை சமூகம் அறிந்தால், பெண்கள் இனிவரும் காலங்களில் ஆணுக்கு அடிமையாகவோ, அவனுக்கு அஞ்சியோ வாழ வேண்டிய தேவையேற்படாது. பெண்கள் தாங்கள் பலவீனமானவர்கள் என்ற உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. தாங்கள் இயலாமையுடையவர்கள் என்றோ, புத்திசாதுரியம் அற்றவர்கள் என்றோ எண்ணிக்கொள்ளத் தேவையில்லை. உடல் hPதியாக தம்மை ஆட்கொள்வதற்கு ஆண்களை அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை. போர்க்களத்தில் தமிழீழப் பெண்கள் அடைந்துள்ள வெற்றிகளின் முழுமையான விளைவுகளினால் தமிழ்ச் சமுகத்திற்குக் கிடைத்துள்ள நன்மைகள் பெருமளவிலானவை. மேற்குலகம் கேள்விப்படாத அனுகூலங்களை இது கொடுத்துள்ளது. முதலாவதாக பெண்களின் அடக்குமுறையின் வேரிற்கே சவால் விடுக்கும் முகமாக, சமூகத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்கு இந்த தமிழீழ அமைப்பு முன்னுரிமை அளித்துவருகின்றது. பெண்களின் உடல் hPதியான பலத்தைக் கட்டியெழுப்பும் பொருட்டு இளந்தலைமுறைப் பெண்களுக்கு கராத்தே போன்ற தற்காப்புப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுப்பதன் மூலம், ஆண்களுடனான சம அந்தஸ்த்தைப் பெண்கள் வகிப்பதற்கு தேவையான கட்டுமானத்தை உறுதிசெய்கின்றது. இந்த உடற்பலம் பற்றிய குறைந்தளவு அறிவுகூட ஆண்களினதும், பெண்களினதும் உளவியலில் பெரும் தாக்கத்தை ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளது. கராத்தேயில் தேர்ச்சியுள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யவோ அடிக்கவோ ஆண்கள் தயங்குவார்கள். தங்களைத் தாங்களே உடல் hPதியாகப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெருமளவிலான பெண்கள் சமூகத்தில் உருவாகும்போது, பெண்களுக்கு எதிரான வன்முறை அளவுகளில் சடுதியான வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
விடுதலை நோக்கிய தமிழீழப் பெண்களின் இந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றப் பாய்ச்சலுக்கு வேறுசில விசேட காரணங்களும் உண்டு. பெண்களுக்கான பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் முகமாக, விபச்சாரமும் ஆபாச இலக்கியங்களும் தமிழீழ விடுதலை இயக்கத்தினால் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. ஆபாச இலக்கியங்கள் எனப்படுபவை வெறும் வியாபாரமே அன்றி வேறில்லை. இங்கு பெண்களின் கவர்ச்சியான மேனிகளும் அவர்களின் ஆபாசமான தோற்றங்களும் பாலியல் பொருட்கள் என்ற பாவனையில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு விற்பனை ஆகின்றன. இவற்றுக்கு உதாரணமாக நீலப்படங்கள் மற்றும் ஆபாசக் கேளிக்கைக் கூடங்கள் போன்றவற்றைக் கூறலாம்.
இந்த ஆபாச இலங்கியங்களே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்று மேற்குலகப் பெண்ணியவாதிகளால் அடையாளம் காணப்பட்டபோதும் இந்த ஆபாச இலக்கியங்களின் பெருக்கத்தின் தீவிரத்தை தடுத்து நிறுத்தமுடியவில்லை. இந்த ஆபாச இலக்கியங்களை சட்டவிரோதமாக்குவதற்கு ஆணாதிக்க மற்றும் முதலாளித்துவ நிறுவனங்கள் கடும் எதிர்ப்புடன் சவால் விட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்களை கேலிக்குரியவர்களாக்கி பொதுப்படையாக மானபங்கப் படுத்துகின்றனர். இன்றைய மேற்குலகப் பெண்ணியவாதிகளின் நிலைமை ஒன்றில் அடக்குமுறைக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றது. அல்லது வலிமையற்றதாக்கப் பட்டிருக்கின்றது. தமிழீழத்தில் இவற்றின் மீது விதிக்கப்பட்ட தடையானது மனித ஜீவன்கள் என்ற hPதியில் பெண்களுக்கான இயல்பான மரியாதையை வழங்குவதற்கான ஆரம்பத்திற்கு உதவியுள்ளது. தமிழீழத்தில் இல்லாதொழிக்கப்பட்டுள்ள 'விபச்சாரம்' அதாவது பாலியல் நோக்கத்திற்காக உடலை விற்கின்ற செயலானது, மேற்கு நாடுகளில் தாராளமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாலியல் அடிமைத்தனத்தின் நேரடிவிளைவு இதுவாகும். வெறும் நுகர்வுப் பொருள் என்ற வகையில் பெண்களின் உடல்கள் வாங்குவதும் விற்பதும் போன்ற இழிவுச் செயற்பாடுளுக்கு உள்ளாகின்றன.

மேற்குலகப் பெண்களின் 'பெண்விடுதலை'
மேலைத்தேய சமூகங்களில் பெண்ணிய அமைப்புக்களினதும் பெண் ஆய்வாளர்களினதும் பெண் அரசியல் வாதிகளினதும் பெருக்கம் அதிகமாகியிருக்கின்ற போதிலும், பெண்விடுதலை என்பது இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்னிருந்த நிலையைவிட பின்நோக்கியே சென்றுள்ளது. இங்கு பெண்ணியம் என்பது சுயம் சார்ந்த பாதைவழியே சென்றுள்ளதுடன், தனிப்பட்ட தன்மையை உடையதாகவே விளங்குகின்றது. அதாவது, இங்கு பெண்விடுதலை என்பது பெண்கள் தாங்கள் விரும்பும் எந்தப் பொருளையும் அவை உடனடிச் சந்தோசம் தரும் பட்சத்தில், அவை எவ வளவு பிரயோசனம் அற்றவை என்றாலும் அவற்றை கொள்வனவு செய்வதற்கான சுதந்திரம் என்றும், தங்கள் உடல்களைப் போதைப்பொருள் பாவனைக்கும், புகையிலை மற்றும் மதுபானபாவனைக்கும் உள்ளாக்கி வருத்திக் கொள்வதற்குமான சுதந்திரம் என்றும், தாங்கள் விரும்பும் அளவிற்கு தங்கள் இஸ்டத்திற்கு பாலியல் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் சுதந்திரம் என்றும் பிரபலப்படுத்திக் கொள்கின்றனர். இந்த 'சுதந்திரங்கள்' மிகவும் தனித்துவிடப்பட்டதும், அன்னியதுமான வாழ்க்கையை பெருமளவிலான பெண்கள் வாழ்வதற்கு வழிகோலும் பாதைக்கு இட்டுச் செல்கின்றன. அங்கு வாழும் பெண்களில் காணப்படும் இம்மாற்றமானது மிகவும் ஆழமான அறிவு கொண்டதாயிருக்கின்றது. ஆனால், விடுதலை பெற்றுத்தரக்கூடியதொன்றாகக் காணப்படவில்லை. ஏனெனில் ஒரு காலத்தில் தந்தையர்களாலோ, சகோதரன்களாலோ அடிமையாகக் கொள்ளப்பட்டவர்கள் தற்போது தொழில் நிறுவனங்களில் இலாபத்தைப் பெற்றுத்தரும் வியாபாரப் பொருட்களாக இருக்கின்றனர். பெண்களுக்கெதிரான வன்முறைக்குற்றங்கள் அதிகரிக்கின்றனவேயொழிய குறையவில்லை. அது மட்டுமல்லாமல் ஒரு பெண் நன்னடத்தை கொண்டவள் என்றாலும் அதற்கான மதிப்பை தன் சொந்த சகோதரர்களிடமிருந்துகூடப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. இதற்குச் சான்றாக குடும்பத்தில் நடைபெறும் சாதாரண சச்சரவுகளின்போது பெண்ணை பாலியல் hPதியாக இழிவுபடுத்தி அவளைப் பொதுவில் அவமானப்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்களைக் கூறலாம்.

மேலைத்தேய பெண்ணியத்திற்கு தோல்வியே!
பெண்ணியம் அல்லது பெண்விடுதலை என்ற சொற்களின் நிறைவான கருத்தை மேற்குலகப் பெண்ணியம் கொண்டிருக்கவில்லை என்பதே நாம் எடுத்துள்ள முடிவு. அதாவது, பெண்களின் விடுதலைக்கு ஒரு பலமான அத்திவாரத்தைக் கட்டியெழுப்புவதில் மேற்குலகப் பெண்ணியவாதிகள் தோற்றமைக்கான காரணம் இங்கு ஆயுதம் தாங்கிப் போராடும் ஒரு பெண்விடுதலை அமைப்பு காணப்படாமையே என்று வெளிப்படையாகக் கூறலாம்.
இருந்தபோதும், இந்த ஆணாதிக்க முறைமையினுள் உள்வாங்கப்படுவதற்கு நாம் பலவந்தப் படுத்தப்படுகின்றோம் என்ற ஐதீகத்தை பரப்பும், குடியேற்றநாட்டவர் என்ற போக்கைக் கொண்ட இவர்களை இது தடுக்கவில்லை. இங்குள்ள இவர்களுடைய சகாக்கள் 'கொழும்புப் பெண்ணியவாதிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். பெண்ணியவாதிகள் என்று அழைக்கப்படும் இவர்கள் ஆணாதிக்கம் நிறைந்த குடியேற்றவாதக் கல்வியையே பெற்றுக் கொண்டுள்ளார்கள். (அதிகாரத்தின் மூலமும் விளம்பரப்படுத்தல் மூலமும்) அதேநேரம் இங்குள்ள பெண்களின் நிலை பற்றி பொருத்தப்பாடான தகுந்த சிந்தனைகள் எதனையும் கொண்டவர்களாக இல்லாமல் தோல்விகாணும் மேலைத்தேய பெண்ணியத்தின் போக்கை பிரதிபண்ணுபவர்களாகவே உள்ளனர்.
சேர்ந்தியங்கும் தத்துவத்தின் ஒரு பகுதியாக, வல்லாதிக்கத்தின் ஒரு பகுதியாக தங்களைத் தாங்களே இவர்கள் மாற்றிக் கொண்டுள்ளார்கள். அத்துடன், தமிழீழப் பெண்போராளிகளைச் சிறுமையாக்கி அவர்களைத் திசைதிருப்பும் முயற்சிகளை செய்யத் தலைப்படுகின்றார்கள் இந்தக் கொழும்புப் பெண்ணியவாதிகள். இவர்களுக்கு சரியான உதாரணம் ராதிகா குமாரசுவாமி, தமிழீழப் பெண்களுக்கு எதிராக சிறீலங்கா இராணுவம் இழைக்கும் கொடுமைகளைப் பற்றியும் அநீதிகளைப் பற்றியும் இவர்கள் பாராமுகமாகவே உள்ளனர். அதே நேரம் அப்படியான இராணுவத்தை எதிர்த்துநின்று துணிவுடன் போர்புரியும் பெண்களைப் பற்றி விமர்சனம் செய்கின்றனர். ஆணாதிக்கத்தின் கூட்டாளி என்பதற்கு ராதிகா குமாரசுவாமி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஏனெனில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக வேண்டி ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட விசேட நிருபர் இவர். ஆனால், உண்மை இதுதான். உலகின் மிகவும் கொடுமையான வன்முறைகள் மேற்கொள்ளப்படும் நாடுகளில் இருந்து வந்த இவர், பெண்களுக்கு எதிராக மோசமான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடும் அதே அரசின் ஆதரவைப் பெறுகின்றார். வெற்றிகரமான விதத்தில் உண்மைகளை மூடிமறைத்து தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்யும் இவர் இவ விடயம் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்க்கச் செய்வதில் தொலைவில் இருக்கின்றமை ஆச்சரியப்படுவதற்கில்லை.

முடிவு.
தமிழீழப் பெண்களாகிய நாம் அடிமைத்தளையிலிருந்து மீண்டுகொள்ள ஆயுதப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். எமது இந்த முயற்சிகள் பலவகையிலும், கொழும்பு பெண்ணியவாதிகளால் தடுக்கப்பட்டபோதும், விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டபோதும் வேறுபல நாடுகள் தோல்விகண்ட இப்பாதையில் வெற்றிநடை போடுகின்றோம். நமது அமைப்பில் உள்ள பெண்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையும், அமைப்பிற்குள்ளேயும் வெளியேயும் உள்ள ஆண்களின் ஒத்துழைப்பும் நாம் வெற்றியடைகின்றோம் என்பதற்கு சான்றுகளாகும். அத்துடன் தமிழீழத்தின் ஆண்கள் தமது சகோதரிகள் போன்றே அன்புடனும் மரியாதையுடனும் பெண்களை நோக்குகின்றனர். இது ஆணாதிக்க சமுதாயத்தை குறிப்பிட்டளவு மாற்றியமைத்துள்ளமைக்கு அத்தாட்சியாகும்.

ஆங்கில மூலம் கொற்றவை (லண்டன்)
-தமிழில் தீப்பொறி.

மேற்குலகப் பிரஜையாக ஒரு பெண் பத்திரிகையாளர் சிலகாலம் தமிழீழத்தில் வாழ்ந்து திரும்பியபோது தமிழீழ விடுதலைப் போராட்டமானது பெண் ஒடுக்குமுறையை எப்படித் தகர்த்துள்ளது என்பதை நேரில் உணர்ந்து தமிழீழப் பெண்ணியத்தையும் மேற்குலகப்பெண்ணியத்தையும் ஒப்புநோக்கி எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்..