Montag, August 11, 2003

கனவு நனவானது - மலைமகள்

பலவீனமாயிருந்த தமிழ்ச் சமூகத்துப் பெண் இனத்தின் மிகப் பலம் வாய்ந்த சக்தியாகவே பெண் போராளிகளைத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்கள் உருவாக்கினார். தமிழீழத்தின் கொல்லைப் புறங்களிலும் வீடுகளின் மூலையிலிருக்கும் சமையலறைகளிலும் முடங்கி, பலம்குன்றி, சிதறிக்கிடந்த பெண்களை, இன்று யாராலுமே மறுக்கவோ, மறைக்கவோ முடியாத பெரும் சக்தியாக ஒருங்குவித்தார். எங்கள் விடயத்தில் யாருமே நம்பியிராத அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். அவர் செய்த அற்புதங்கள் இனம், மொழி, மதம் என்ற எல்லைகளைக் கடந்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
1998இல் அன்னை பூபதியின் நினைவுநாள் நிகழ்வின்போது வெரித்தாஸ் தமிழ்ப் பணிப் பொறுப்பாளர் அருட்திரு ஜெகத் கஸ்பார் அடிகள் மேற்குலகிலே ஆற்றிய உரை ஒன்றிலே பின்வருமாறு குறிப்பிட்டார்.

"நான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவற்றிலே ஒன்று பெண்ணடிமைச் சமூகத்தில் வாழ்ந்த பெண்கள் இன்று போராடிக் கொண்டிருப்பது" ஒருவரின் கண்களிலும் படாமல் ஒதுங்கியிருந்த எம்மை உலகின் புருவம் உயரும்வரை து}க்கி நிமிர்த்த எமது தலைவர் அவர்கள் கடந்த தடைகள் கொஞ்சமல்ல.
பெண்ணடிமைச் சமூகத தின் கோரப்பிடியுள் நசுங்கிக் கிடந்த பெண்ணினத்தைத் தட்டியெழுப்பி, அவர்களின் கடமைகளைப் புரிய வைத்து, விடுதலை உணர்வுடன் எழுந்தவர்களை ஒன்றுசேர்த்து அணியாக்கி, அதுவரை காலமும் ஆண் போராளிகள் செய்துவந்த பயிற்சிகளையெல்லாம் செய்வித்து, ஆயுதங்களுடன் தமிழர் தெருக்களில் உலவச் செய்யலாம், சிங்களப் படைகளின் தலைகளைச் சீவலாம் என்று யாருமே துளிகூடக் கற்பனை பண்ணிப் பார்த்திராத காலத்தில், அதைச் செய்ய முனைந்தார் அவர்.
அந்த நேரத்திலேயே இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களாக இருந்த பலர் இது எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்று தமக்குள்ளேயே யோசித்துக் குழம்பிக் கொண்டிருக்க, தலைவர் செயலிலேயே இறங்கிவிட்டார். இது சாத்தியமா என்ற ஐயப்பட்டுக் கொண்டிருக்கையிலேயே அது சாத்தியமாகிவிட, அதற்குமேல் அதைப்பற்றிக் கதைப்பதற்கு வேறு என்ன இருக்கிறது?
எல்லோருக்கும் சவாலாக தலைவரின் கனவு நனவாகத் தொடங்கியது. முதற்கட்டமாக பெண்களை அணிதிரட்டி, இந்தியாவின் திண்டுக்கல், சிறுமலைக் காட்டுப் பாசறை வரை கூட்டி வந்தாயிற்று. இனி அவர்களைச் சரியான முறையில் கையாளக் கூடியவர்களை மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க ஒழுங்கு செய்ய வேண்டுமேயெனச் சிந்தித்து, தானே நேரடியாகப் பயிற்சியாசிரியர்களைத் தேர்ந்தெடுத்தார். அநேக பயிற்சிகளை தானே நேரடியாகக் கண்காணித்தார். அருகிலிருந்து சொல்லிக் கொடுத்தார்.

பலரின் கேலிக்குச் சவால் விட்டு, சமூகத்தின் வளர்ப்பு முறையால் ஒதுங்கிப் போகின்ற இயல்பும், பிடிவாதமும் வீம்பும் கொண்ட இவர்களை உளவுரன் கொண்ட போர்வீரர்களாக வளர்த்தெடுத்ததில் முழுப்பங்கும் தலைவருடையதே. அவரின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்கவல்ல மூத்த போராளிகள் தலைவரின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் இவர்களைப் புடம் போட்டனர்.


அண்ணனின் ஆணை
அதுவரை காலமும் இயக்கத்தில் அனைத்து உறுப்பினர்களும் எடுத்த அனைத்துப் பயிற்சிகளையுமே திறம்பட முடித்து தாயகம் திரும்பிய தேசத தின் புதல்விகள் எல்லோரினதும் கைகளிலும் ஆ-16 ரகத் துப்பாக்கிகள். அந்த நேரத்தில் மிகவும் மதிப்பான, கிடைப்பதற்கு அரிதான துப்பாக்கி அது. எல்லோருக்குமே ஆ-16 என்றால் தனி விருப்பம். தன் கண்ணருகே அல்லாமல் து}ர நிற்கப் போகும் இவர்களிடமிருந்து ஆண் போராளிகள் எப்படியாவது ஆ-16ஐ வாங்க முயற்சி செய்வார்கள் என்பதைப் புரிந்து கொண்ட தலைவர் இந்தியாவிலேயே இவர்களிடம்,
"யார் கேட்டாலும் இதை நீங்கள் கொடுக்க வேண்டாம்" என்று சொல்லித்தான் அனுப்பி னார். அது போல தாயகத்திலிருந்த அனைத்துப் போராளிகளுக்குமே "யாரும் இவர்களிடமிருந்து ஆ-16ஐ வாங்கக் கூடாது" என்ற கண் டிப்பான கட்டளையொன்றையும் அனுப்பியிருந்தார். தலைவரின் அந்த ஒரு வசனமே பெண் போராளிகளின் கையில் அவர்களது ஆ-16களைத் தக்கவைக்கப் போதுமானதாகவிருந்தது. தலைவர் அப்போது இவர்களின் அருகே இல்லை. பல கிலோ மீற்றர்களுக்கப்பால் கடல் கடந்த து}ரத்திலிருந்தாலும், அவரின் ஒரே ஒரு வசனம் இவர்களின் பிரியத்துக்குரிய ஆயுதத்தை வேறு யாரும் நெருங்கிவிடாமல் பாதுகாத்தது.

மாற்றம் மலரும் காலம் 1987இல் யாழ்ப்பாணத்தில் கோட்டை, நாவற்குழி இராணுவத்தளங்களைச் சூழவிருந்த காவலரண்கள் சிலவற்றில் பெண் புலிகள் கடமையாற்றிக் கொண்டிருந்த நேரம் ஒரு தளபதி தன் மனதில் நெருடிக்கொண்டிருந்ததைத் தலைவரிடம் கேட்டே விட்டார்.

"அண்ணா, பெண் பிள்ளையள் இப்படி ஜீன்ஸ், சேட்டோடை திரியிறதை யாழ்ப்பாணச் சனம் ஏற்றுக்கொள்ளாது. அவை சட்டையோடை இருந்தா என்ன?" என்றார். பெண் போராளிகள் ஜீன்ஸ், சேட் லு}லு}லு}லு}லு}. சிரித்துக் கொண்டார். அவரிடமே,
"நடைமுறைகள் மாறும்போது இப்படித்தான் விமர்சனங்கள் வரும். பிறகு காலப்போக்கில் பழகிவிடும்" என்றார். இதன் பின்னர் பெண்கள் பற்றிய தம் பிற்போக்கான எண்ணங்களை தலைவரிடம் சொல்ல யாருமே துணிவதில்லை. பெண் போராளிகள் விடயத்தில் அவரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முயன்றனர். தற்செயலாக எமது விடயத்தில் தவறாக எதையாவது சொன்னால், செய்தால் அவரால் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிவரும் என்ற அச்சத்தாலேயே அவா கள் எங்களிடம் மரியாதையு டன், மிகுந்த கவனத்துடன் பழகி, புரிந்து கொள்ள முயற்சித்தார்கள்.

காட்டுக்குள் எல்லோருமே தலைவரின் அருகில் இருந்தபோது அவர் எம்முடன் பழகும் விதத்தை, நடத்தும் விதத்தை நேரடியாகவே பார்த்து தாமும் நடக்க முயற்சித்தார்கள். எங்களிடம் அவருக்கு இருக்கின்ற அக்கறையைப் புரிந்து கொண்டார்கள்.

தன்னம்பிக்கையே நல்வழிப்படுத்தும்
இந்திய வல்லாதிக்க இராணுவம் தமிழீழத்தில் தன் கோரக் கால்களைப் பதித்திருக்க, தலைவர் வன்னியிலே புலிகளின் தளத்தை அமைத்து இயக்கத்தைப் பலப்படுத்தினார். அந்த நேரம் பெண் போராளிகளின் முதலாவது அணியினரும், இரண்டாவது, மூன்றாவது பாசறைகளிலே பயின்றவர்களுமாக கூடியளவிலான பெண் போராளிகள் மணலாற்றுக் காட்டினுள் தலைவருடன் பாசறை அமைத்துத் தங்கியிருந்தனர்.
தலைவரின் குடில் நடுவே இருந்தது. அதற்கு ஒருபுறம் பெண் போராளிகளின் குடில்களும், இன்னொருபுறம் ஆண் போராளிகளின் குடில்களும் அமைக்கப்பட்டிருந்தன.
இரு பாலாரும் காலைப் பயிற்சிக்காக ஓடுவதற்குத் தனித்தனி ஓடுபாதைகள் இருந்தன. ஆனால், இரண்டு ஓடு பாதைகளுமே தலைவரின் குடிலின் வாசலுக்கு நேரே வந்து சந்திக்கும். காலையில் பயிற்சிக்காக ஓடினாலும் சரி, தலைவரின் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது. அவர் எல்லோரையுமே பார்த்துக் கொண்டிருப்பார்.
தவறுகள் செய்து தண்டனையில் ஓடினால் தலைவர் கண்டுவிடுவாரே என்பதற்காகவே எம்மவர்கள் அநேக தவறுகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். என்றாலும் எங்கேனும் நிகழும் சிறுதவறுகள் ஒருநாளுக்கு ஒருவரையாவது அந்த ஓடு பாதைக்கு அழைத்து வந்துவிடும். தவறுகளின் வகைக்கேற்ப பாய், பானை, சட்டி, வாளி எனப் பலதரப்பட்ட பொருட்களைச் சுமந்தவாறு ஓட வேண்டியிருக்கும். தலைவரின் குடிலுக்கு நேரே ஓடிவரும்போது யாருக்குமே அவரை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இராது.
ஓடி முடிந்ததும் தலைவர் கூப்பிட்டு "என்ன நடந்தது" என்று கேட்பார். யாரால் என்ன விட யத்துக்காகத் தண்டனை தரப்பட்டது என்பதை அவர் முன் நின்று சொல்லி முடிப்பதற்குள் உயிரே ஒரு முறை போய் வரும். மறந்து போய்க்கூட அந்தத் தவறை இன்னொரு முறை செய்யமாட்டாத அளவுக்கு அது மனதில் பதிந்துவிடும்.
"அண்ணாவின் அருகிலேயே நிற்கின்றோம். அவர் கண் பார்வையில் வளர்கின் றோம்" என்ற உணர்வே எம்மை பல வழிகளில் நெறிப்படுத்தும். பிழைகளைச் செய்யவிடாது தடுக்கும்.
மலைமகள்

Keine Kommentare: